மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
இன்று (டிசம்பர் 5) அதிமுக பொதுச்செயலாளரும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் 6-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காலை 9.30 மணியளவில் தொண்டர்களுடன் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர், செங்கோட்டையன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் அனைவரும் உறுதி மொழி ஏற்றனர்.
புரட்சித் தலைவி கொண்ட கொள்கை, லட்சியத்தோடு வீறுநடை போட்டு எதிரிகளை விரட்டியடிப்போம். துரோகிகளைத் தூள் தூளாக்குவோம் என்று வீரசபதம் ஏற்பதாக உறுதிமொழி ஏற்றனர்.
ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தியபின், எடப்பாடி பழனிசாமி ஜி20 மாநாடு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக காலை 11 மணியளவில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
மோனிஷா