எடப்பாடி திடீர் உண்ணாவிரதப் போராட்ட அறிவிப்பு!

அரசியல்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஜனநாயகப் படுகொலை நடந்திருப்பதாகக் கூறி அதிமுக சார்பில் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்.

தமிழக சட்டமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்று(அக்டோபர் 17) தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமாரை நியமிக்கவில்லை என்றும், ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதே இடத்தில் இருக்கை ஒதுக்கியதற்கும் எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

அவர்கள் சபாநாயகர் அப்பாவு இருக்கை முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.  இதையடுத்து அனைவரையும் வெளியேற்ற உத்தரவிட்ட சபாநாயகர், சட்டமன்றத்தில் பங்கேற்க தடைவிதித்தார்.

அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் அப்பாவு நீதிமன்ற தீர்ப்பையே மதிக்கவில்லை என்றும், ஸ்டாலின் சொல்வதை அப்படியே செய்வதாகவும் குற்றம் சாட்டினார்.

அதிமுகவை நேரடியாக எதிர்க்க துணிவில்லாமல், சபாநாயகரை வைத்து திமுக பழிவாங்க நினைப்பதாகவும் கூறினார்.  

இந்தநிலையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஜனநாயகப் படுகொலை செய்யப்பட்டிருப்பதாகவும், அதைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்றும் பழனிசாமி அறிவித்துள்ளார்.

நாளை(அக்டோபர் 19) சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெறும் போராட்டத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும், சென்னை மாவட்டச் செயலாளர்களும், தொண்டர்களும் பங்கேற்கவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

கலை.ரா

நீதிமன்றத் தீர்ப்பை சபாநாயகர் மதிக்கவில்லை: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

எதிர்க்கட்சித் தலைவர் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட பதவி: சபாநாயகர் விளக்கம்!

+1
0
+1
1
+1
0
+1
1
+1
2
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *