டின்.என்.பி.எஸ்.சி குரூப் 4 பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் டின்.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு நடைபெற்றது. ஆனால் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து தேர்வு நடைபெற்று 8 மாதங்கள் கழித்து கடந்த மார்ச் மாத இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியானது.
ஆனால், தேர்வு முடிவுகள் வெளியான பிறகும் கலந்தாய்வு நடத்தப்படவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து இன்று (ஜூன் 7) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”2022ம் ஆண்டு சுமார் 10 ஆயிரம் குரூப் 4 காலிப்பணியிடங்களுக்காக, நடைபெற்ற டின்.என்.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் மாதம் வெளியானது. ஆனால் இதுவரை கலந்தாய்வு நடைபெறவில்லை.
இந்நிலையில், டின்.என்.பி.எஸ்.சி குரூப் 4-க்கான காலிப்பணியிடங்கள் தற்போது 25,000மாக உயர்ந்திருப்பதாக செய்திகள் வருகின்றன, எனவே 2022ம் ஆண்டு டின்.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்விலிருந்தே சுமார் 20 ஆயிரம் தகுதி பெற்ற தேர்வாளர்களையாவது தேர்ந்தெடுத்து அனைவருக்கும் கலந்தாய்வை நடத்தி, அரசு துறைகளில் காலியாக உள்ள 20,000 பணியிடங்களையாவது உடனடியாக நிரப்பிட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
டின்.என்.பி.எஸ்.சி குரூப் 4-க்கான பணியிடங்கள் நிரப்பப்படாததால் அரசின் அனைத்து துறைகளின் பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது , இதனால் மக்கள் பல்வேறு வகைகளில் அவதிக்கு உள்ளாகிறார்கள்
ஆகவே விரைந்து டின்.என்.பி.எஸ்.சி குரூப் 4 காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என விடியா அரசை மீண்டும் வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மோனிஷா
கிராமிய மக்கள் வாழ்வியலை பேசும் தண்டட்டி: ட்ரெய்லர் எப்படி?
10 லட்சம் லிட்டர் ஆவின் பால் திருட்டு: பொங்கும் ராமதாஸ்