மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு கட்சி தலைமை அலுவலகத்தில் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேக் வெட்டி கொண்டாடினார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி அதிமுக அலுவலகத்தில் இன்று கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.
பின்னர் அதிமுக அலுவலகத்திற்கு முன் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், ”அம்மா 75” என்று தயாரிக்கப்பட்ட பெரிய கேக்கை வெட்டி, கழக நிர்வாகிகளுக்கு ஊட்டியும், இனிப்புகள் வழங்கியும் ஜெயலலிதா பிறந்தநாளை கொண்டாடினார்.
நேற்று (பிப்ரவரி 23) அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக வந்தநிலையில், முதன்முறையாக அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த அவருக்கு கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் பட்டாசு வெடித்து, ட்ரம்ஸ் வாசித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மோனிஷா
ஜெயலலிதா பிறந்தநாள் : பேசாமல் நழுவி சென்ற பன்னீர்
மல்லுக்கட்டிய மக்னா யானை… போராடி பிடித்த வனத்துறையினருக்கு புதிய சிக்கல்!