மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எடப்பாடி பழனிசாமி இன்று சாமி தரிசனம் செய்தார்.
உலகப் பிரசித்தி பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக இன்று காலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்தார். எடப்பாடி பழனிசாமி உடன் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி உதயகுமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் உடன் சென்றனர்.
முன்னதாக கோவிலுக்கு வந்த எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ காலில் விழுந்து வரவேற்று வணங்கினார். தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் , ராஜன் செல்லப்பா ஆகியோரும் எடப்பாடி பழனிசாமிக்கு சால்வை போர்த்தி மரியாதை செய்தனர்.
மோனிஷா
396 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது!
’அலங்கு’ ஃபர்ஸ்ட் லுக்: சொல்ல வருவது என்ன?