டெல்லியில் நடைபெற்று வரும் என்.டி.ஏ ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் இன்று 26 எதிர்க்கட்சிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டணிக்கு இந்தியா என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனால் ட்விட்டரில் INDIA vs NDA என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.
இந்தசூழலில் மாலை 5 மணிக்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியிருக்கிறது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சிவசேனா அணியின் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் பங்கேற்றுள்ள பெரும்பாலானவர்கள் இரண்டாக உடைந்த கட்சிகளின் தலைவர்கள் ஆவர்.
அசோகா ஹோட்டலில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த பிரதமர் மோடியை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் கொத்து கொடுத்து வரவேற்றார். ஜேபி நட்டா,, ஏக் நாத் ஷிண்டே, ஜித்தன் ராம் மஞ்சி ஆகியோரும் மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
தொடர்ந்து கூட்டம் தொடங்கி நடைபெற்றும் வரும் நிலையில், பிரதமர் மோடிக்கு அருகே எடப்பாடி பழனிசாமி அமர்ந்துள்ளார். இதன்மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக தலைமை முக்கியத்துவம் கொடுத்திருப்பது தெரியவருகிறது.
எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்துதான் பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராஜ்நாத் சிங் அமர்ந்திருக்கிறார்.
61 சட்டமன்ற உறுப்பினர்கள், 4 ராஜ்யசபா எம்.பி.க்களை கொண்டது அதிமுக. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட மற்ற கட்சிகளைக் காட்டிலும் அதிமுகவுக்குத் தான் அதிக எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர். இந்தசூழலில்தான் எடப்பாடி பழனிசாமிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது.
நாடு முழுவதும் இருந்து கூட்டணி கட்சிகள் வந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். எங்கள் கூட்டணி தேசிய முன்னேற்றத்துக்கும், பிராந்திய வளர்ச்சிக்கும் பாடுபடும் என்று பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
பிரியா
“எதிர்க்கட்சிகளை பார்த்து பிரதமர் மோடி பயப்படுகிறார்” – கார்கே
‘இந்தியா’வுக்கு என்.டி.ஏ.வால் சவால் விட முடியுமா? : மம்தா