அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இன்று (நவம்பர் 27) ஆட்சேபனை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. edappadi filed against ops
கடந்த ஆண்டு நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது அணியை சார்ந்த வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதனை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தார்.
தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் உயர்நீதிமன்ற டிவிசன் அமர்வில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்ற அமர்வு, ”தீர்மானங்களுக்கு தடை விதித்தால் கட்சியின் செயல்பாட்டிற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று கூறி பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டது.
மேலும் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடியும் செய்யப்பட்டது.
பின்னர் உயர்நீதிமன்ற அமர்வு தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.
இதனையடுத்து தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு தாக்கல் செய்திருந்தார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனு நாளை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் எஸ்.வி.என்.பட்டி அமர்வு முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.
இந்தநிலையில், வழக்கை ஒரு வாரம் ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அதற்கு ஆட்சேபனை தெரிவித்து தற்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஆட்சேபனை மனு தாக்கல் செய்துள்ளது.
அதில் இந்த வழக்கை ஒத்திவைக்கக்கூடாது என்றும், நாளையே விசாரிக்க வேண்டும் என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஆட்சியர்களுக்கு ED சம்மன் அனுப்பிய வழக்கில் நாளை தீர்ப்பு!
IPL2024: கடைசி வரை நீடித்த போராட்டம்… தாய் கழகத்தில் இணைந்தார் ஹர்திக்
edappadi filed against ops