ஜெயலலிதா நினைவிடத்தில் கண்கலங்கிய எடப்பாடி

அரசியல்

ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி கண்கலங்கி மரியாதை செலுத்தினார்.

சென்னை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார், முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் நிரந்தர பொதுச்செயாலாளர் பதவி ரத்து என கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

இதற்கிடையே அதிமுக தலைமை அலுவலகத்திற்கு காலையில் ஓபிஎஸ் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு ஓபிஎஸ் – ஈபிஎஸ் இருதரப்பினரும் கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அதன் தொடர்ச்சியாக அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் சென்னை மெரினா கடற்கரைக்கு சென்றார். அங்கு முதலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் கண்கலங்கி மரியாதை செலுத்தினார்.

தொடர்ச்சியாக அருகே இருந்த எம்ஜிஆர் மற்றும் அண்ணா நினைவிடங்களுக்கும் சென்று தொண்டர்களின் உற்சாக கோஷத்துடன் மரியாதை செலுத்தினார். தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்ட நிலையில் தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு மரியாதை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

– கிறிஸ்டோபர் ஜெமா

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0