யாருடன் கூட்டணி அமைப்பது என்பதை முடிவு செய்ய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று (பிப்ரவரி 12) நடைபெற்றது.
மாநில, மாவட்ட நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 450 பேர் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில்… ஒவ்வொருவருக்கும் ஒரு வாக்குப் படிவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் அதிமுக+ பாஜக, அதிமுக, பாஜக என மூன்று சாய்ஸுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
இதில் ஒவ்வொரு நிர்வாகியும் தங்கள் பெயர், பதவியை எழுதி வாக்களித்து வாசனிடம் கொடுத்திருக்கிறார்கள்.
செயற்குழு கூட்டத்தில், ‘நாம் மாநில கட்சி. அதனால் அதிமுகவோடு கூட்டணி செல்வதே சிறந்தது’ என்று சில மாவட்ட தலைவர்கள் பேசியிருக்கிறார்கள். சில மாநில நிர்வாகிகள், ‘உங்கள் நலனே எங்கள் முடிவு’ என்று வாசனை பார்த்து கூறியுள்ளார்கள்.
தேர்தல் முடிவுகள் வாசன் கையில்தான் உள்ளது. அதை வைத்துதான் கூட்டணி முடிவு தெரியவரும் என்கிறார்கள் தமாகா நிர்வாகிகள்.
இதற்கிடையே, பாஜகவோடு மீண்டும் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதிபட சொல்லிவிட்ட நிலையில்… அதிமுக+பாஜக என்ற ஒரு ஆப்ஷனை வாசன் தன் கட்சி நிர்வாகிகளுக்கு கொடுத்திருப்பது எடப்பாடிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள் அதிமுக தரப்பில்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அப்பாவு கேட்ட அம்பதாயிரம் கோடி ரகசியம்: அப்டேட் குமாரு
எலக்ஷன் ஃப்ளாஷ்: ராஜ்யசபா கேட்கும் விசிக