சென்னைக்கு இன்று (ஏப்ரல் 8) வருகை தரும் பிரதமர் மோடியை தனியாக சந்திக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 15 நிமிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் புதிய விமான முனையம், வந்தே பாரத் ரயில் துவக்கவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று (ஏப்ரல் 8) தமிழ்நாடு வருகிறார்.
இதனையடுத்து சென்னை வரும் பிரதமரை சந்திக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தனித்தனியாக நேரம் கேட்கப்பட்டிருந்தது.
அதன்படி படி மதியம் 2.30 மணிக்கு வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்கும் நிகழ்வில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்பர் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நிகழ்ச்சிகள் முடிந்து மைசூருக்கு புறப்பட்டு செல்லும் முன் இரவு 7.30 முதல் 8.15 மணி வரை விமான நிலையத்தில் முக்கிய தலைவர்களை பிரதமர் சந்திக்க உள்ளார்.
இந்த 45 நிமிடங்களில் பிரதமரை சந்திப்பதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் பாஜக – அதிமுக கூட்டணி குறித்து பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போன்று பிரதமரை தனியாக சந்திப்பதற்கு கோரிய ஓ.பன்னீர்செல்வத்திற்கும் 10 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
பிரதமர் மோடியை சந்திக்கும் எடப்பாடி மற்றும் பன்னீர்
ராஜ்பவன்… ரவிபவன் அல்ல: ஆளுநருக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம்!