செந்தில் பாலாஜி வழக்கில் விசாரணை பாதிப்பு… உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை!

கீழமை நீதிமன்றத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டுள்ளது என்று அமலாக்கத்துறை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று (டிசம்பர் 13) தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டு  சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் கடந்த செப்டம்பர் மாதம் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஜாமீன் வழங்கிய பிறகு செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றதால், விசாரணை பாதிக்கும். இதனால் செந்தில் பாலாஜிக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக்கோரி பாதிக்கப்பட்ட வித்யாகுமார் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள், அபய் எஸ்.ஓகா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வில் டிசம்பர் 2-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி அபய் எஸ்.ஓகா, “நாங்கள் ஜாமீன் தருகிறோம், மறுநாளே நீங்கள் போய் அமைச்சராகிறீர்கள். ஒரு மூத்த கேபினட் அமைச்சராக உங்கள் பதவியால், சாட்சிகள் அழுத்தத்திற்கு உள்ளாவார்கள்.

பாலாஜியின் செல்வாக்கு மிக்க பதவியின் காரணமாக அவருக்கு எதிராக சாட்சியமளிப்பதற்கு சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறதா என்பதை உச்சநீதிமன்றம் கண்காணிக்கும்” என்று தெரிவித்தார்.

இந்த வழக்கு விசாரணை, நீதிபதி அபய் எஸ்.ஓகா, பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, “இந்த வழக்கில் கீழமை நீதிமன்றத்தில் விசாரணை பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், அமலாக்கத்துறை சார்பில் எழுத்துப்பூர்வமான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்” என்று வாதிட்டார்.

இதனையடுத்து நீதிபதிகள், அமலாக்கத்துறை பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வரும் டிசம்பர் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குசேனலில் இணையுங்கள்…டன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் 

அரசியல் பயணம் எப்போது?: சசிகலா

திண்டுக்கல் மருத்துவமனையில் தீ விபத்து… லிப்ட்டுக்குள் போராடிய உயிர்கள் : என்ன நடந்தது?

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts