ED raid in hemant soren press advisor home

ஜார்கண்ட் முதல்வருக்கு நெருக்கடி : சோதனையை தீவிரப்படுத்தும் ED

அரசியல் இந்தியா

விசாரணைக்கு ஆஜராக ஜார்கண்ட் முதல்வருக்கு பல முறை சம்மன் அனுப்பியும், ஆஜராக மறுத்தநிலையில் அவரது பத்திரிகை ஆலோசகர் வீட்டில் இன்று (ஜனவரி 3) அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சட்டவிரோத சுரங்க அனுமதி மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் உள்ளிட்ட வழக்குகளில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை 6 முறை சம்மன் அனுப்பியது.

ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகாததால் 7வது முறையாக அவர் விரும்பும் நேரம், தேதி, இடம் ஆகியவற்றை குறித்து 7 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

இதனையடுத்து அமலாக்கத்துறைக்கு ஹேமந்த் சோரன் எழுதிய கடிதத்தில்,

“அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்கள் சட்டவிரோதமானது. நான் எனது சொத்து விவரங்களை ஏற்கனவே அளித்துள்ளேன். அரசாங்கத்தை சீர்குலைக்க அமலாக்கத்துறை முயற்சித்து வருகிறது” என்று குற்றம்சாட்டியிருந்தார்.

இதனிடையே அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானால் ஹேமந்த் சோரன் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் காண்டே தொகுதியில் முக்தி மோர்ச்சா சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக தேர்வான சர்பராஸ் அகமது கடந்த டிசம்பர் 31ஆம் தேதி ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார்.

அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்று கொண்ட ஜார்கண்ட சட்டசபை செயலகம், காண்டே தொகுதி காலியாக உள்ளதாக ஜனவரி 1ஆம் தேதி அறிவித்தது.

இந்நிலையில் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானால் அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.

எனவே அவர் முதல்வர் பதவியை தனது மனைவி கல்பனா சோரனிடம் ஒப்படைக்க உள்ளார் என்றும் அதற்கு வசதியாக சர்பராஸ் அகமது ராஜிமானா செய்துள்ளார் என்றும் பாஜக தெரிவித்திருந்தது.

ஆனால் இதற்கு ஹேமந்த் சோரன் மறுப்பு தெரிவித்துள்ளார். முதல்வர் பதவியை தனது மனைவி கல்பனா சோரனிடம் ஒப்படைக்க போவதாக கூறுவது பாஜகவின் ஊகங்கள் என்று தெரிவித்துள்ளார்.

இதனால் ஜார்க்கண்ட் அரசியலில் பரப்பான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் இன்று மாலை முக்தி மோர்ச்சா மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் பத்திரிகை ஆலோசகர் அபிஷேக் பிரசாத் வீடு, ஹசாரிபாக் ஏ.எஸ்.பி ராஜேந்திர துபே, சாஹேப்கஞ்ச் மாவட்ட ஆட்சியர் ராம் நிவாஷ், முன்னாள் எம்.எல்.ஏ பப்பு யாதவ் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் ஆகியோரின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: அதானி பங்குகள் கிடுகிடு உயர்வு!

இந்த பரிவர்த்தனைகளுக்கு 1.1% கட்டணம்… யுபிஐ புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்தன!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *