கரூரில் அமைந்துள்ள லக்கி டிரேடர்ஸ் உரிமையாளர் செந்தில் வீட்டில் இன்று (ஆகஸ்ட் 4) அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூரில் கடந்த மே மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனை தொடர்ந்து ஜூன் 13-ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி அவரை கைது செய்தனர்.
இந்தநிலையில், நேற்று (ஆகஸ்ட் 3) கரூர் கோவை சாலையில் உள்ள செந்தில் பாலாஜி உதவியாளர் சங்கர் வீடு, சின்ன ஆண்டாள் பகுதியில் உள்ள தனலட்சுமி மார்பில்ஸ், தனம் பேக்டரி ஆகிய மூன்று இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.
அதேபோல, கோவை 80 அடி சாலையில் உள்ள டாஸ்மாக் சூப்பர்வைசர் முத்துபாலன் இல்லம், கோவை நாடார் வீதியில் உள்ள அருண் அசோசியேட் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் அருண் இல்லம் மற்றும் அவரது கட்டுமான நிறுவனத்திலும் நடைபெற்ற இந்த சோதனை நேற்று நள்ளிரவு தான் முடிவடைந்தது.
இந்நிலையில், கரூர் அண்ணாநகர் பகுதியில் அமைந்துள்ள லக்கி டிரேடர்ஸ் உரிமையாளர் செந்தில் வீடு மற்றும் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட் 4 ) அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்க்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையானது சிஐஎஸ்எப் மற்றும் சிஆர்பிஎஃப் காவல்துறை பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
உணவகங்களில் புகை பிடிக்கும் அறைக்கு தடை: அரசிதழ் வெளியீடு!
இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வாரா? – தீர்ப்பு ஒத்திவைப்பு!