கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரின் மனைவி நிர்மலா பெயரில் உள்ள 2.49 ஏக்கர் நிலம் மற்றும் அந்த நிலத்தில் கட்டி வரும் பங்களா வீட்டை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கரூர் சேலம் பைபாஸ் சாலையில் உள்ள ஆண்டாள் கோவில் கிழக்கு மண்மங்கலம் தாலுகாவில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் 2.49 ஏக்கரில் பங்களா வீடு ஒன்றை கட்டி வருகிறார்.
இந்த பங்களா வீட்டில் நேற்று (ஆகஸ்ட் 9) அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பங்களா வீடு தொடர்பான ஆவணங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் வீட்டு வாசலில் நோட்டீஸை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒட்டினர்.
இதனைத் தொடர்ந்து அசோக் குமார் மனைவி கட்டிவரும் பங்களாவை முடக்கியிருப்பதாக மேலக்கரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் அசோக் குமார் மனைவி கட்டிவரும் பங்களாவை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
उक्त संपत्ति को पीएमएलए, 2002 की धारा 17(1-ए) के तहत रोक(फ्रीज़ )आदेश लगा दिया गया है|
— ED (@dir_ed) August 10, 2023
இது குறித்து அமலாக்கத்துறை இன்று (ஆகஸ்ட் 10) வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,
“தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடந்த சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை நேற்று கரூரில் சோதனை பணியைத் தொடங்கியது.
விசாரணையில், சேலம் பைபாஸ் ரோடு, ஆண்டன்கோவில், கரூர் பகுதியில் உள்ள 2.49 ஏக்கர் நிலத்தை, அனுராதா ரமேஷ் என்பவரிடம் இருந்து பி.லட்சுமி (ஆர்.வி. அசோக் பாலாஜியின் மாமியார்) 10 லட்ச ரூபாய்க்கு வாங்கியது தெரியவந்தது.
ஆனால் நிலத்தின் உண்மையான மதிப்பு ரூ.30 கோடிக்கு மேல் என்பதும் தெரியவந்தது. பி.எம்.எல்.ஏ, 2002-ன் பிரிவு 17(1ஏ)-ன் கீழ் சொத்து முடக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மோனிஷா