ECI seized Rs 1760 cr worth of items

ஐந்து மாநிலத் தேர்தல்: பறிமுதல் செய்யப்பட்டது எத்தனை கோடி தெரியுமா?

அரசியல் ஐந்து மாநில தேர்தல்

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட ஐந்து மாநிலத் தேர்தல்களையொட்டி, பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள், மதுபானங்கள் மற்றும் ரொக்கம் பற்றிய விவரத்தை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய ஐந்து மாநிலத் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் தேர்தல்களை நடத்தி முடித்துவிட்டது.

ராஜஸ்தானில் வரும் 25ஆம் தேதியும், தெலங்கானாவில் வரும் 30ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் டிசம்பர் 3ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், இந்த ஐந்து மாநிலங்களில் தேர்தல் அறிவிப்பு வெளியான அக்டோபர் 9 முதல் இதுவரை போதைப் பொருட்கள், பணம், மதுபானங்கள், பரிசுப் பொருட்கள் என ரூ.1,760 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த ஐந்து மாநிலங்களில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது ரூ.239.15 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இதைவிட ஏழு மடங்கு அதிக மதிப்புள்ள பொருட்கள் இம்முறை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: மட்டர் பனீர்

பாலாற்றில் வீணாகும் நீரை 11 ஏரிகளுக்கு திருப்பிவிட்ட எம்.எல்.ஏ நந்தகுமார்

இந்திராகாந்தியை விட உதயநிதிதான் முக்கியமா?, 15 சீட்டுகள் வேண்டும்… சத்தியமூர்த்தி பவன் கூட்டத்தில் சலசலப்பு!

மாதம் முழுதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்? இதை கவனிங்க…

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *