அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் இன்று (ஆகஸ்ட் 18) பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
கடந்த ஆண்டு ஜுலையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுத் தீர்மானங்களுக்கு எதிராக வழக்கறிஞர்கள் ராம் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிசாமி ஆகியோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அவர்களது மனுவில், “அதிமுக பொதுச் செயலாளர் தேர்வு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ளவில்லை.
எனவே, தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மேலும் நிலுவையில் உள்ள வழக்குகளின் இறுதி தீர்ப்பு வரும் வரை, அதிமுக கட்சி விதிகளில் எவ்வித மாற்றங்களும் செய்யக்கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர்கள் வலியுறுத்தியிருந்தனர்.
இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் தனது பதில் மனுவை இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
அதில், ”அதிமுக பொதுசெயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்தது என்பது, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாகும்.
அதேவேளையில் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் மூல வழக்குகளில் தீர்ப்பு வரும் பட்சத்தில், அதனை தேர்தல் ஆணையம் பின்பற்றும். அதுவே இறுதி முடிவாக இருக்கும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
உரிமை தொகை விண்ணப்பிக்க இன்று முதல் சிறப்பு முகாம்!
“நீண்ட ஓய்வுக்குப் பின் திரும்பி வந்திருக்கிறேன்”- பும்ரா நெகிழ்ச்சி!