அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி தேர்தல் பிரச்சாரம் செய்ததாக, நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை தொகுதியில் பாஜக வேட்பாளராக நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். தொகுதி முழுவதும் திறந்த வேனில் தீவிரமாக சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், நேற்று வள்ளியூர் பகுதியில் நயினார் நாகேந்திரன் பிரச்சாரம் செய்தார்.
அப்போது தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட இரவு 10 மணிக்கு மேல் கூடங்குளம் அருகே இருக்கன்துறை பகுதியில் நயினார் நாகேந்திரன் பிரச்சாரம் செய்துள்ளார். இதுகுறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி தினேஷ்குமார் அளித்த புகாரின் பேரில், நயினார் நாகேந்திரன் உள்பட 25 பேர் மீது தேர்தல் நன்னடைத்தை விதிகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, நேற்று முன்தினம் இரவு சென்னை எழும்பூரில் இருந்து சென்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் நயினார் நாகேந்திரன் ஹோட்டலில் வேலை பார்த்த மூவர் கொண்டு சென்ற ரூ.4 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படை மற்றும் தாம்பரம் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ப்ளூ டைமண்ட் ஹோட்டலில் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.
இதுகுறித்து பேசிய நயினார் நாகேந்திரன், “ரயில் நிலையத்தில் பிடிபட்ட ரூ.4 கோடிக்கும் எனக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது. என் பெயரை களங்கப்படுத்த வேண்டும் என்று ஆளும் திமுக என்னை டார்கெட் செய்கிறது” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘ஹாட்ஸ்பாட்’ படம் பாக்ஸ் ஆபீஸில் வெற்றி இல்லை, ஆனால்… தயாரிப்பாளர் பேச்சு!
துரைமுருகன் உறவினர் வீட்டில் தேர்தல் பறக்கும் படை ரெய்டு: ரூ.7.5 லட்சம் பறிமுதல்!