அதிமுக பொதுச்செயலாளர்: எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்!
எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இன்று (ஏப்ரல் 20)அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு முடிவுகளையும், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியையும் அங்கீகரிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இதுதொடர்பாக எந்த முடிவும் எடுக்காமல் தேர்தல் ஆணையம் காலதாமதம் செய்து வந்தது.
இதனையடுத்து, எடப்பாடி பழனிசாமி தன்னை கட்சியின் பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க உத்தரவிடக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அதில், அதிமுக கட்சி விதிகளை மாற்றியதை உடனடியாக ஆணையம் ஏற்க வேண்டும். கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதை சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிசாமி தரப்பில் இந்த கோரிக்கை வைக்கப்பட்டது.
இதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில் 10 நாட்களில் பதிலளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
இந்நிலையில் அந்த கோரிக்கையை ஏற்று அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவின் இரட்டை இலை சின்னமும் கிடைத்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
சென்னையில் வி.பி.சிங் முழு உருவ சிலை: முதல்வர் ஸ்டாலின்
கர்நாடக தேர்தல்: மேலும் 2 வேட்பாளர்களை அறிவித்த பன்னீர்