உத்தவ் தாக்கரே: கேட்டது சூரியன் கிடைத்தது தீபம்!

அரசியல்

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியின் வில் அம்பு சின்னம் அக்டோபர் 8 ஆம் தேதி தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டது.

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவில் பிளவு ஏற்பட்டது. இதையடுத்து, அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்கள், உத்தவ் தாக்கரேவுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றனர்.

இதனால் உத்தவ் தாக்கரே தலைமையில் ஓர் அணியும், ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மற்றொரு அணியும் பிரிந்தன. இதையடுத்து, முதல்வர் பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே விலகினார்.

பின்னர், பா.ஜ.க. ஆதரவுடன், மகாராஷ்டிர முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவி ஏற்றார்.

முதல்வராய்ப் பதவியேற்ற ஏக்நாத் ஷிண்டே, அடுத்து சிவசேனாவையும் கைப்பற்றும் நோக்கில் அதற்கான வேலைகளைச் செய்துவந்தார்.

அதுதொடர்பான ஆவணங்களையும் தேர்தல் ஆணையத்தில் அவர் பதிவு செய்திருந்தார்.

இதையடுத்து, வில் அம்பு சின்னம் யாருக்கு சொந்தம் என முடிவு செய்ய உரிய சான்றுகளை வழங்கும்படி, உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் சமர்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

ec allots flaming torch uddhav thackeray faction of shivsena

இருதரப்பும் வேறு ஏதாவது ஒரு சின்னத்தை தேர்வு செய்து, அக்டோபர் 10 ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என மேலும் அந்த உத்தரவில் கூறப்பட்டு இருந்தது.

உத்தவ் தாக்கரே அணியினர் தீப்பந்தம், திரிசூலம், உதயசூரியன் ஆகிய 3ல் ஒரு சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கேட்டு இருந்தனர்.

இதேபோல சிவசேனா பாலாசாகேப் பிரபோந்த்கர் தாக்கரே, சிவசேனா பாலாசாகேப் தாக்கரே, சிவசேனா உத்தவ் பாலாசாகேப் தாக்கரே ஆகிய பெயர்களில் ஏதாவது ஒன்றை தங்கள் அணிக்கு கட்சியின் பெயராக ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஷிண்டே தரப்பினரும் 3 சின்னம், பெயர்களை தேர்வு செய்து அதில் ஒன்றை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கைவிடுத்திருந்தனர்.

இதில் அவர்கள் கடாயுதம், முரசு, வாள் ஆகிய 3ல் ஒரு சின்னத்தையும், பால்தாக்கரே மற்றும் சிவசேனா வருமாறு 3 பெயர்களையும் சமர்பித்திருந்தனர்.

இந்நிலையில், இதனை பரிசீலித்த தேர்தல் ஆணையம் உத்தவ் தாக்கரே அணிக்கு சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) என பெயர் ஒதுக்கீடு செய்தது.

மேலும் உத்தவ் தாக்கரே அணிக்கு ‘தீபச் சுடர்’ சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏக்நாத் ஷிண்டே அணிக்கு பாலாசாஹே பஞ்சி சிவசேனா என்ற பெயர் ஒதுக்கப்பட்டுள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

கனிமொழியை வாழ்த்திய உதயநிதி: கருப்பு சோபாவில் இருந்து கண்ட கலைஞர்

தீபாவளி: எந்த ஊருக்கு செல்ல எந்த பேருந்து நிலையம்? இதோ பட்டியல்!

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.