ஒட்டுக்கேட்பு, ஊழல்… : நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள்!

Published On:

| By Guru Krishna Hari

நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அடங்கிய புக்லெட்டை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 18ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய புக்லெட் வெளியிடப்பட்டுள்ளது.

ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகள் அடங்கிய வார்த்தைகள் அதிகம் இடம் பெற்றுள்ள அந்த புக்லெட்டில், “ ஒட்டுக்கேட்பு, ஊழல், வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், கொரோனா பரப்புபவர், வாய் ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரி, அழிவு சக்தி, ஆகிய வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாது.

இரட்டை வேடம், பயனற்றது, நாடகம், ரத்தக்களரி, குரூரமானவர், ஏமாற்றினார், குழந்தைத்தனம், கோழை, குற்றவாளி, முதலை கண்ணீர், அவமானம், கழுதை, கண்துடைப்பு, ரவுடித்தனம், போலித்தனம், தவறாக வழிநடத்துதல், பொய், உண்மையல்ல, காலிஸ்தானி (சீக்கிய பிரிவினைவாத இயக்கம்), பாசாங்குத்தனம் ஆகிய வார்த்தைகளும்

முட்டாள்தனம், பாலியல் தொல்லை, குண்டர்கள், லாலிபாப், பாப்கட் ஆகிய வார்த்தைகளும் பயன்படுத்தக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தினால் சபை தலைவர்கள், சபை குறிப்பிலிருந்து நீக்கிவிடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள சட்டப்பேரவை மற்றும் மக்களவை, மாநிலங்களவைகளில் உறுப்பினர்களின் எந்த வார்த்தைக்கு எதிர்ப்பு கிளம்புகிறதோ. எதனால் சர்ச்சை ஏற்படுகிறதோ அந்த வார்த்தைகள் அவை மரபுக்கு எதிரானவை என கருத்தில் கொள்ளப்பட்டு பயன்படுத்தப்படக் கூடாத வார்த்தைகள் என கணக்கில் கொள்ளப்படுகின்றன.

அதன்படி இந்த ஆண்டு, 2021 முதல் சர்ச்சையான வார்த்தைகளும், காமன்வெல்த் நாடுகளில் தடை செய்யப்பட்ட வார்த்தைகளும் பரிசீலனையில் எடுத்துக்கொள்ளப்பட்டு இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

-பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share