உச்ச நீதிமன்றத்தின் 50ஆவது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்

அரசியல்

உச்ச நீதிமன்றத்தின் 50ஆவது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட்டை நியமிப்பதற்கான பரிந்துரை கடிதத்தை தற்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித் வழங்கினார்.

உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக ஆகஸ்ட் 27 ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார் யு.யு.லலித். உச்ச நீதிமன்ற நடைமுறைப்படி தலைமை நீதிபதியின் வயது 65.

யு.யு.லலித்துக்கு 65 வயதாவதால் அவர் 74 நாட்களுக்கு மட்டுமே இந்தப் பதவியை வகிக்க முடியும். யு.யு.லலித் நவம்பர் 8 ஆம் தேதியுடன் ஓய்வு பெற இருக்கிறார்.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. பதவியில் இருக்கும் தலைமை நீதிபதி தான், அடுத்த நீதிபதி யார் என்பதை பரிந்துரைக்கவேண்டும். அதற்கான பரிந்துரை கடிதத்தை அனுப்பும்படி மத்திய சட்ட அமைச்சகம் கேட்டது.

அதன்படி , உச்ச நீதிமன்றத்தின் 50- ஆவது தலைமை நீதிபதியாக தனஞ்சய ஒய் சந்திரசூட்டை பரிந்துரை செய்தார் தலைமை நீதிபதி யு.யு.லலித்.

இதற்கான பரிந்துரை கடிதத்தை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீதிபதிகள்  முன்னிலையில் சந்திரசூட்டிடம் இன்று (அக்டோபர் 11) வழங்கினார் தலைமை நீதிபதி யு.யு.லலித்.

இக்கடிதத்தின் ஒரு நகல் மத்திய சட்ட அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். டி.ஒய்.சந்திரசூட் உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக பணியாற்றி வருகிறார். பணிமூப்பு அடிப்படையில் அவரது பெயரை பரிந்துரை செய்திருக்கிறார் தலைமை நீதிபதி யு.யு.லலித்.

கலை.ரா

பொருளாதார வல்லுநர்களின் ஆய்வுகளும்… நோபல் பரிசும்!

4 மொழிகளில் டப் செய்யப்படும் ‘கந்தாரா’!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.