அரசுக்கு ரூ.500 கோடி நஷ்டம் : எஸ்.பி வேலுமணி வீட்டில் ரெய்டு!

Published On:

| By Selvam

முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான சென்னை, புதுக்கோட்டை, கோவை, சேலம், தேனி, திருவள்ளூர், மதுரை உள்ளிட்ட 39 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

அந்தவகையில், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி,

2015-2018 காலகட்டத்தில் தெரு விளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் அரசுக்கு 500 கோடி இழப்பு ஏற்படுத்தியாகவும்,

தனக்கு நெருக்கமானவர்களுக்கு ஒப்பந்தம் வழங்கியதாகவும்  எழுந்த புகாரின் அடிப்படையில் எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதனடிப்படையில், எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று (செப்டம்பர் 11) காலை 6 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் 10 இடங்கள், கோவையில் 9 இடங்கள், தாம்பரம், ஆவடி, திருச்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட 7 இடங்கள் என மொத்தம் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதிமுக முன்னாள் ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கே.சி.பி இன்ஜினியர்ஸ் நிர்வாக இயக்குனர்கள் சந்திர பிரகாஷ், சந்திரசேகர், வடவள்ளியைச் சேர்ந்த சீனிவாசன், சித்தார்த்தன், கோவையைச் சேர்ந்த ராஜன் உள்ளிட்ட 10 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  

செல்வம்

ராசாத்தி அம்மாளை நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel