எஸ்.பி வேலுமணி மீதான வழக்குகளை ரத்து செய்வதா? லஞ்ச ஒழிப்புத்துறை கடும் ஆட்சேபம்!

அரசியல்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீதான வழக்குகளை ரத்து செய்ய கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு முதல் கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் தொடர்ந்து 4 முறை வெற்றி பெற்றவர் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி.

முன்னதாக கான்ட்ராக்டராக இருந்த எஸ்.பி வேலுமணி, சட்டமன்ற உறுப்பினரானதும், அதிலிருந்து வெளியேறினார்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு தான் வேலை செய்த நிறுவனத்துக்கே டெண்டரை ஒதுக்கினார்.

இதில் பல கோடி அளவில் முறைகேடு நடந்ததாக கூறி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னை மற்றும் கோவை லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன.

இதை அடிப்படையாக வைத்து கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முன்னாள் அமைச்சர் எஸ். பி வேலுமணிக்கு சொந்தமான வீடு அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.

60 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையை தொடர்ந்து எஸ். பி வேலுமணி உட்பட 17 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தனக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய கோரி வேலுமணி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான வழக்கின் விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை தற்போது பதில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

அதில் எஸ்.பி வேலுமணி மீதான வழக்குகளை ரத்து செய்ய கடுமையாக ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2 ஊழல் வழக்குகளை ரத்துசெய்யக் கோரி எஸ்.பி. வேலுமணி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரி வேலுமணி தொடர்ந்து வழக்குகள் நாளை செப்டம்பர் 5ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

கிறிஸ்டோபர் ஜெமா

இரட்டைத் தலைமையை ஏற்கும் எஸ்.பி.வேலுமணி

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *