மருத்துவமனையில் துரைமுருகன் : என்ன ஆச்சு?

Published On:

| By Kavi

மூத்த அமைச்சர் துரைமுருகன் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளதால் அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அண்ணா அறிவாலயம் சென்ற திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அங்கு திரண்டிருந்த தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

அவருடன் நீர்வளத் துறை அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகனும் வந்திருந்தார்.

இந்நிலையில் அவருக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு அவசர சிகிச்சை பிரிவில் துரைமுருகனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார்.

அவருக்கு ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு குறைந்ததன் காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்தசூழலில் அவரை பார்க்க முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு புறப்பட்டுள்ளார் என தகவல்கள் வருகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

மணிப்பூர் குறித்து மௌனம் களைத்த பிரதமர் மோடி

உணவுப் பணவீக்கம் 9.36% ஆக உயர்ந்துள்ளது

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel