பிப்ரவரி 6-ஆம் தேதி மாலை நடந்த திருநெல்வேலி மாவட்ட திமுக கள ஆய்வு கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகனும் கலந்து கொண்டார். முதலமைச்சருக்கு பிறகு கடைசியாகப் பேசிய துரைமுருகனின் பேச்சை அனைத்து நிர்வாகிகளும் கைதட்டி ஆமோதித்தனர். duraimurugan asked stalin periyar
அப்படி என்ன பேசினார் துரைமுருகன்?
“திமுக துரோகிகளை பார்த்து பார்த்து வளர்ந்த இயக்கம். எத்தனையோ துரோகிகள் நமக்கு எதிராக முளைத்து எழுந்தார்கள். ஆனால், அவர்கள் அத்தனை பேரும் நம்முடைய கழக விசுவாசிகளின் ஓயாத உழைப்பால் காணாமல் போனார்கள்.
நம்முடைய தலைவர் முதலமைச்சர் நமக்கெல்லாம் முன்னுதாரணமாக தீவிரமாக பணியாற்றி வருகிறார். அவரைப் பார்த்து நாமும் பணியாற்ற வேண்டும். தலைவருக்கு யாரும் துரோகம் செய்யாதீர்கள். துரோகம் செய்பவன் எவனையும் விடாதீர்கள்.

தலைவரே… உங்களிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். உங்களுக்கு கட்சிப் பணிகள் இருக்கின்றன. ஆட்சி பணிகள் இருக்கின்றன. அதே நேரம் பெரியாரை கொச்சைப்படுத்தி தெருத்தெருவாக சிலர் பேசிக் கொண்டிருக்கிறான்கள். அவனுக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். உங்களால் முடியும் என்று நான் நம்புகிறேன்” என்று துரைமுருகன் உருக்கமாக பேசினார்.
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை குறிப்பிட்டு தான் துரைமுருகன் பேசுகிறார் என்பதை அறிந்து, நிர்வாகிகள் அனைவரும் கைதட்டினார்கள். duraimurugan asked stalin periyar