ராகுல் காந்தி நடைப்பயணத்தில் துரை வைகோ

அரசியல்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் இன்று (நவம்பர் 2) துரைவைகோ கலந்துகொண்டார்.

இந்திய ஒற்றுமை பயணத்தைக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரியில் தொடங்கி கேரளா, கர்நாடா, ஆந்திரா என தற்போது தெலங்கானாவில் நடைப்பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.

அவரது பயணத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் தொடங்கி சாமானிய மக்கள் வரை பலரும் கலந்துகொள்கின்றனர்.

நேற்று ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் கட்சியின் புதிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்துகொண்டார். அப்போது, ராகுல் காந்தியின் பங்கு இல்லாமல் மத்தியில் பாஜக அல்லாத அரசு சாத்தியமில்லை எனவும் 2024ல் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்றும் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று காலை தெலங்கானா, ஹைதராபாத்தில் தனது பாதயாத்திரையைத் தொடங்கியிருக்கிறார் ராகுல் காந்தி. அவருடன் பாலிவுட் நடிகை பூஜா பட்டும் இணைந்து சிறிது தூரம் நடந்தார்.

அதுபோன்று 2 மணி நேர நடைப்பயணத்தில் மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோவும் கலந்துகொண்டு தனது ஆதரவைத் தெரிவித்தார்.

இன்றைய நடைபயணத்தின் போது தெலங்கானாவில் உள்ள காங்கிரஸ் ஆதரவாளர்கள் மகாகாளி தேவியை வழிபடுவதற்காகக் கொண்டாடப்படும் “போனலு” பண்டிகையின் நாடகத்தை நடத்திக் காட்டினர்.

பிரியா

“எள் முனையளவும் பயம் வேண்டாம்” -அமைச்சர் கே.என்.நேரு

ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற திமுக எடுத்த முடிவு!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

1 thought on “ராகுல் காந்தி நடைப்பயணத்தில் துரை வைகோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *