மகளுக்கு திருமணம் : முதல்வருக்கு பத்திரிகை வைத்த துரை வைகோ

அரசியல்

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை திருச்சி எம்.பி. துரை வைகோ இன்று (செப்டம்பர் 21) சந்தித்து தனது மகளின் திருமண அழைப்பிதழை வழங்கினார்.

திருச்சி எம்.பி.யும் மதிமுக முதன்மை செயலாளருமான துரைவைகோ, தனது மனைவியுடன் இன்று முதல்வர் ஸ்டாலினின் முகாம் அலுவலகத்துக்குச் சென்று அவரைச் சந்தித்தார்.

வரும் அக்டோபர் 6ஆம் தேதி துரை வைகோவின் மகளுக்கு திருமணம் நடைபெற இருக்கும் நிலையில், அதற்கான அழைப்பிதழை முதல்வரிடம் வழங்கினார்.

முதல்வரை சந்தித்தது குறித்து துரை வைகோ தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாடு முதல்வரை அவரது இல்லத்தில் இன்று சந்தித்து எனது மகள் திருமண அழைப்பிதழை அளித்தேன்.

மிகுந்த மகிழ்ச்சியுடன் மணமக்களுக்கு வாழ்த்துக்களை கூறுவதாக தெரிவித்தார்.
மதிமுக தலைவர் வைகோவின் உடல் நலன் குறித்து மிகுந்த அக்கறையுடன் கேட்டு அறிந்தார்.

அண்மையில் அமெரிக்கா சென்று வந்த முதல்வரின் பயணம் வெற்றிகரமாக அமைந்தது குறித்து அவரிடம் எனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டேன்

அமெரிக்காவில் 17 நாட்களில் 25 நிறுவனங்களுடன் மேற்கொண்ட சந்திப்பில் ரூ.7,618 கோடி மதிப்பிலான 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதற்கும் , இதன் மூலம் 11,516 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்கும் முதல்வரின் அமெரிக்கப் பயணம் தமிழ்நாட்டு மக்களுக்கான சாதனைப் பயணமாக அமைந்தது என்று முதல்வரிடம் தெரிவித்தேன்.

குறிப்பாக எனது திருச்சிராப்பள்ளி தொகுதியில் மின்னணு சாதனங்களை உற்பத்தி செய்து தரும் ஜேபில் நிறுவனம் (Jabil Industries) 2000 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலை தொடங்க இருப்பதாகவும், இதனால் 5,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளதற்கு எனது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

பிரியா

பாலசந்தர் குறித்து சர்ச்சைப் பேச்சு… சுசித்ராவுக்கு திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் கண்டனம்!

விமர்சனம் : லப்பர் பந்து!

+1
0
+1
0
+1
1
+1
5
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *