பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று (டிசம்பர் 27) காலை 11 மணிக்கு கோவை வருவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், டெல்லியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக மதியம் 12.45 மணிக்கு அவர் கோவை வருவார் என்று பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு காலை 11.45 மணியளவில் ஜே.பி.நட்டா வருவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. டெல்லியில் நிலவிய கடுமையான பனி மூட்டம் காரணமாக அவர் புறப்பட்ட விமானம் கிளம்புவதற்கு சற்று தாமதம் ஏற்பட்டது. இதனால் ஜே.பி.நட்டா கிளம்பிய விமானம் கோவை வந்தடைய 12.45 மணி முதல் 12.50 மணி வரை ஆகும் என்று பாஜக சார்பில் தெரிவித்துள்ளனர்
12 மணியளவில் கோட்டை ஈஸ்வரன் கோவில் நடை சாத்தப்படும். இதனால் ஜே.பி நட்டா கோவிலுக்கு செல்லக்கூடிய நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் 11.30 மணியளவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக தேசிய மகளிரணி செயலாளர் வானதி சீனிவாசன் தலைமையில் பாஜவினர் கோவிலுக்கு சென்று வழிபட உள்ளனர். கோவிலில் வழிபட்ட பின்னர் அவர்கள் இருவரும் கோவை விமான நிலையத்திற்கு சென்று ஜே.பி.நட்டாவை வரவேற்க உள்ளனர்.
அதனை தொடர்ந்து ஜே.பி.நட்டா கோவையில் உள்ள லீ மெரிடியன் ஓட்டலுக்கு சென்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ய உள்ளார். 4 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் பாஜக வாக்குச்சாவடி மற்றும் முகவர்கள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இரவு கோவை ஈஷா யோகா மையத்தில் ஓய்வெடுக்கும் நட்டா, நாளை காலை கோவையிலிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு செல்கிறார்.
செல்வம்
கொரோனாவைத் தீயாய் பரவவிடும் சீனா… காரணமென்ன?
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!