அதிமுகவில் மீண்டும் இரட்டை தலைமை!

அரசியல்

உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சினை முடிவுக்கு வந்து இரட்டை தலைமையே நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஜுலை 11 ஆம் தேதி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லுமா செல்லாதா என்பது குறித்த அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உயர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பை இன்று (ஆகஸ்ட் 17) வழங்கினார்.

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகவில்லை, அந்தப் பதவிகள் செல்லும், ஜுன் 23-க்கு முன்பு இருந்த முந்தைய நிலையே தொடரும்.

இதனால் ஜூலை 11-ல் எடப்பாடி பழனிசாமி அணியினரால் கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லாது என்று நீதிபதி ஜெயச்சந்திரன் அதிரடியாக உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தனித்தனியாக பொதுக்குழுவை கூட்ட முடியாது, ஒரு சட்ட ஆணையரை நியமித்து பொதுக்குழுவை கூட்டவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டு இருக்கிறார்.

ஜூன் 23-க்கு முன்பு இருந்த அதே நிலையே நீடிக்கும் என்று உத்தரவிட்டு இருப்பதால் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் பொதுக்குழுவை கூட்ட எங்களுக்கு தான் அதிகாரம் உள்ளது என்று எடுத்து வைக்கப்பட்ட வாதம் தள்ளுபடியானது.

இதனால் ஜூலை 11 ஆம் தேதி கொண்டு வரப்பட்ட அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது என்றே அர்த்தமாகி இருக்கிறது.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகவில்லை, அவை செயல்பாட்டில் தான் உள்ளன,

அதில் திருத்தம் எதும் செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படவில்லை என்ற பன்னீர் தரப்பின் வாதம் அப்படியே ஏற்றுக்கொள்ளப்பட்டதால்,

அதிமுகவை வழிநடத்துவது ஒருங்கிணைப்பாளர்கள் தான் என்பது தீர்ப்பு மூலம் நிரூபணமாகி இருக்கிறது.

மேலும் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளரானது செல்லாது என்பது உறுதிபடுத்தப்பட்டு இருக்கிறது.

ஓ.பன்னீர்செல்வத்தின் ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் பதவிகள் நீடித்துள்ளன. பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற பிரச்சினை முடிவுக்கு வந்து இரட்டைத் தலைமையே தொடரும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

கலை.ரா

டிஜிட்டல் திண்ணை:  அதிமுகவில் யாருக்கு ஆதரவு? இதுதான் அமித் ஷா திட்டம்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *