ரிமோட் வாக்குப்பதிவு குறித்த செயல்முறை விளக்கக் கூட்டத்தில் பங்கேற்க அதிமுகவின் இரட்டை தலைமையை குறிப்பிட்டு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.
இந்தியாவிற்குள் புலம்பெயர்ந்துள்ள தொழிலாளர்கள் தேர்தலில் வாக்களிக்கும் வகையில் ரிமோட் வாக்குப்பதிவு முறையை விரைவில் நடைமுறைப்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
ரிமோட் வாக்குப்பதிவு குறித்து எட்டு தேசிய கட்சிகள் 57மாநில கட்சிகளுக்கு ஜனவரி 16 ஆம் தேதி டெல்லியில் உள்ள தேர்தல்ஆணைய அலுவலகத்தில் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட உள்ளது.
இதற்காக நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சித்தலைவர்களுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியிருக்கிறது. அந்த அடிப்படையில் தமிழகத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் கடிதத்தின் படி தமிழ்நாடு முதன்மை தேர்தல் அதிகாரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் இணைஒருங்கிணைப்பாளர் என்று கடிதம் அனுப்பி உள்ளார்
அதிமுகவில் யார் தலைமை என்று சர்ச்சை இருந்து வரும் நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் இருவரையுமே குறிப்பிட்டு ரிமோட் வாக்குப்பதிவு செயல்முறை விளக்கக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கடிதம் அனுப்பியிருக்கிறது.
ஆக29 -12- 2022 தேர்தல் ஆணைய பட்டியலின்படி அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற அதிகார தரவரிசைதான் இருக்கிறது என்பது தெளிவாகியுள்ளது.
முன்னதாக ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க.வின் கருத்துகளை கேட்கும் வகையில் சட்ட ஆணையம் கடிதம் அனுப்பியிருந்தது.
சட்ட ஆணையத்தின் தலைவரும், நீதிபதியுமான ரிது ராஜ் அவஸ்தி, அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று குறிப்பிட்டு கடிதம் அனுப்பியிருந்தார்.
அதற்கு முன்பு ஜி20 ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம், எடப்பாடிக்கு அனுப்பிய கடிதத்தில் அவரை இடைக்காலப் பொதுச்செயலாளர் என்றே குறிப்பிட்டிருந்தது.
இதை ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக எதிர்த்து அந்த அமைச்சகத்துக்கு கடிதமும் எழுதினார். இந்தப் பின்னணியில் தேர்தல் ஆணையம் இரட்டை தலைமையை குறிப்பிட்டு கடிதம் அனுப்பியிருக்கிறது.
கலை.ரா
மோடிக்கு ஆறுதல்: ஸ்டாலின், எடப்பாடி தனித்தனியாக பயணம்!
நடிகை கொலை: பணத்திற்காக கணவரே கொன்று நாடகமா?