சிறுபான்மையினரின் நலனுக்காக திராவிட மாடல் தொடர்ந்து செயல்படும்: முதல்வர்

அரசியல்

சிறுபான்மையினருக்காக கோரிக்கை வைக்காமலே செய்யும் அரசு, கோரிக்கை வைத்தால் செய்யாமல் இருக்குமா? என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை நீலாங்கரையில் திமுக சார்பில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 14) கலந்து கொண்டார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “இந்த இஃப்தார் விழாவானது அனைத்து மத தலைவர்களையும் ஒருங்கிணைக்கும் விழாவாக நடைபெற்று வருகிறது.

திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வந்ததோ, அப்போதெல்லாம் இஸ்லாமியருக்கு பல்வேறு திட்டங்கள் உருவாக்கி தரப்பட்டது. முதன்முறையாக ஆட்சிக்கு வந்தவுடன் மிலாது நபிக்கு விடுமுறை அறிவித்தவர் கலைஞர். ஆனால் அடுத்து வந்த அதிமுக ஆட்சியில் அது ரத்து செய்யப்பட்டது. பின்னர் மீண்டும் வந்த திமுக ஆட்சியில் ரத்து அறிவிப்பானையை ரத்து செய்து அரசாணை வெளியிட்டு மீண்டும் மிலாது நபிக்கு அரசு விடுமுறையை கொண்டுவந்தார் கலைஞர்.

உருது பேசும் முஸ்லீம்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது, சிறுபான்மையின நல வாரியத்தை தொடங்கியது, காயிதே மில்லத் மணி மண்டபம் மற்றும் கல்லூரியை உருவாக்கியது மற்றும் காயிதே மில்லத் ஆண்கள் கல்லூரிக்கு இடம் கொடுத்தது என இதுபோன்று இஸ்லாமிய சமூகத்திற்காக கலைஞர் செய்தது ஏராளம். அவற்றை இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இஸ்லாமியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா ஒன்றில் கலைஞர் பேசுகின்ற போது சொன்னார், ‘எனக்கு நன்றி சொல்லிப் பேசினார்கள். நன்றி சொல்லி உங்களிடம் இருந்து என்னைப் பிரித்து விடாதீர்கள்’ என்று சொன்னவர் கலைஞர்.

இஸ்லாமியர்கள் வேறு, தான் வேறு என்று கலைஞர் என்றுமே நினைத்ததில்லை. அவரது வழித்தடத்தில் தான் இப்பொழுது திராவிட மாடல் ஆட்சி செயல்பட்டு வருகிறது. இந்த ஆட்சி அமைந்த உடன் சிறுபான்மையினருக்கு ஆணையம் அமைக்கப்பட்டது. சிறுபான்மை விடுதியில் பண்டிகைகளுக்கு சிறப்பு உணவு தரப்படுகிறது. சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் கட்டப்பட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வக்பு சொத்துகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் 2021ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சிறுபான்மையினருக்காக கோரிக்கை வைக்காமலேயே செய்து கொடுக்கப்பட்டவை.

கோரிக்கை வைக்காமலே செய்யும் அரசு, சிறுபான்மையினர் கோரிக்கை வைத்தால் செய்யாமல் இருக்குமா? எல்லாருக்கும் எல்லாம் என்ற கொள்கையின் அடிப்படையிலே இந்த திராவிட மாடல் அரசு கலைஞரின் வழியில் இயங்கி வருகிறது.” என்றார்.

அதனைத் தொடர்ந்து இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியிலும் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார்.

கிறிஸ்டோபர் ஜெமா

எட்டு நாட்களுக்கு முன்பே வீட்டை காலி செய்த ராகுல்காந்தி

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சி.பி.ஐ. சம்மன்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

1 thought on “சிறுபான்மையினரின் நலனுக்காக திராவிட மாடல் தொடர்ந்து செயல்படும்: முதல்வர்

  1. சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை எப்போ விடுதலை செய்வீங்க, பிரதமரை கொண்டவங்களை விடுதலை பண்ணியாச்சு, மதம் காரணம் சொல்லி விடுதலை செய்யாமல் இருப்பது சமூகத்துக்கு செய்யும் துரோகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *