குடியரசு தலைவர் வேட்பாளா் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா் திரெளபதி முர்மு 540 எம்பிகளின் 3,78,000 வாக்கு மதிப்புகளை பெற்றுள்ள நிலையில் 15 செல்லாத வாக்குகள் பதிவாகியுள்ளது.
நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா் திரெளபதி முர்முவும், எதிா்க்கட்சிகளின் வேட்பாளா் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிட்டனா்.
தேர்தல் கடந்த திங்கள்கிழமை ( ஜூலை 18 ) நடைபெற்ற நிலையில், வாக்குகள் எண்ணும் பணி தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் தேர்தல் அதிகாரி முன்பு இன்று காலை ( ஜூலை 21) 11 அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதுவரை ( 3:45 மணி வரை ) ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா் திரெளபதி முர்மு 540 எம்பிகளின் 3,78,000 வாக்கு மதிப்புகளை பெற்றுள்ளார். எதிா்க்கட்சிகளின் வேட்பாளா் யஷ்வந்த் சின்ஹா 208 எம்பிகளின் 1,45,600 வாக்கு மதிப்புகளை பெற்றுள்ளார்.
மொத்தம் 15 வாக்குகள் செல்லாதவை என தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இறுதி முடிவுகள் இன்று மாலை அறிவிக்கப்படலாம்.
க.சீனிவாசன்