கடவுளிடம் வரம் கேட்ட ராமதாஸ்

அரசியல்

மது இல்லா தமிழகம் மற்றும் மழை நீர் கடலில் கலக்க கூடாது என்ற இரண்டு வரங்களை கடவுளிடம் கேட்பேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக தொடங்கப்பட்டதன் 35-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு தைலாபுரம் தோட்டத்தில் அரசியல் பயிலரங்க வளாகத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், “வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தமிழக அரசு நல்ல முடிவு எடுக்கும். புகையில்லாத, மது இல்லாத தமிழகம் அமைய வேண்டும்.

புகையிலை எந்த வடிவத்திலும் மக்களிடம் சென்று சேரக்கூடாது. அதனை தடை செய்ய எல்லா முயற்சிகளையும் பாமக எடுத்து வருகிறது. கடவுள் என்னிடம் வந்து என்ன வரம் வேண்டும் என்று கேட்டால், மது இல்லா தமிழகம், மழை நீர் கடலில் கலக்க கூடாது என்ற இரண்டு வரங்களை கேட்பேன். பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரக்கூடாது. சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவதில் தமிழக அரசு முனைப்பு காட்டுகிறது” என்று தெரிவித்தார்.

செல்வம்

“கல்வியின் மூலம் நிரந்தரமான மாற்றங்களை உருவாக்கலாம்” – சூர்யா

மதுரை மாநாடு: எடப்பாடி தலைமையில் ஆலோசனை கூட்டம்!

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *