6 பேர் விடுதலை : ஆளுநர் செய்த தவறு! – ராமதாஸ்

Published On:

| By Selvam

தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது 4 ஆண்டுகளாகியும் ஆளுநர் நடவடிக்கை எடுக்காததால், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறை அனுபவித்த வந்த 6 பேர் 4 ஆண்டுகள் தாமதமாக விடுவிக்கப்பட்டனர் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரையும் உச்சநீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ளது.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில்,

“ராஜீவ் கொலை வழக்கில் தண்டனைக் காலத்தை நிறைவு செய்த பிறகும் சிறை தண்டனை அனுபவித்து வந்த நளினி, முருகன், ரவிச்சந்திரன், சாந்தன், இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார்,

ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது.

dr ramadoss condemned governor rajiv gandhi convict case

6 தமிழர்களின் நன்நடத்தை, கல்வித் தகுதி மேம்பாடு ஆகியவற்றின் அடிப்படையில், பேரறிவாளன் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு, அவர்கள் விடுதலை செய்யப்படுவதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்திருக்கிறது. இது வரவேற்கத்தக்கது

6 தமிழர்களின் விடுதலைக்கு 09.09.2018-இல் தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானம் தான் அடிப்படை.

அமைச்சரவை தீர்மானத்தை அப்போதே ஆளுநர் ஏற்றுக் கொண்டிருந்தால் அவர்கள் விடுதலையாகியிருப்பார்கள். இப்போது 4 ஆண்டுகள் தாமதமாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சரவையின் முடிவுகள் மீது ஆளுநர்கள் முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயிக்கப்படாதது தான் பல சிக்கல்களுக்கு காரணம் ஆகும். இந்த நிலையை மாற்ற அமைச்சரவையின் பரிந்துரை, தீர்மானம் ஆகியவற்றின் மீது ஆளுனர்கள் முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

“அரசின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி”- டி.கே.எஸ். இளங்கோவன் கருத்து!

“அறிவுரை தான் வழங்கமுடியும் நடவடிக்கை எடுக்கமுடியாது” – கே.என்.நேரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel