இரட்டை இலை:  ஸ்டாலின் வெளிப்படுத்திய விருப்பம்!

அரசியல்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ. வி. கே. எஸ் இளங்கோவனுக்காக அமைச்சர்கள் மாவட்டச் செயலாளர்கள் ஈரோட்டில் முகாமிட்டு வேக வேகமாக பணியாற்றி வருகிறார்கள்.

ஈரோடு மாவட்ட அமைச்சரும் மாவட்ட செயலாளருமான முத்துசாமி தேர்தல் பணிகளை முன் நின்று கவனித்து வருகிறார்.

சில தினங்களாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூத் முகவர்களின் கூட்டங்களை ஆங்காங்கே ஏற்பாடு செய்து அவர்களிடையே திமுகவின் ரகசிய வியூகங்களை பற்றி எடுத்துரைத்து வருகிறார் முத்துசாமி.

அப்படி பேசும்போது, “அதிமுக குழப்பத்தில் இருக்கிறது என்ற மிதப்பில் தீவிரமாக பணியாற்றாமல் இருந்து விடாதீர்கள். திமுகவுக்கே உரிய தீவிரமான தேர்தல் பணிகளை தேர்தல் பிரச்சாரம் முடியும் நாள் வரை நாம் மேற்கொள்ள வேண்டும். கடைசி கட்ட தேர்தல் பணிகளையும் செவ்வனே செய்ய வேண்டும்.

நமது தலைவரான முதலமைச்சர் ஸ்டாலின் தினமும் என்னோடு அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்.

அப்போது அவர் இந்த இடைத்தேர்தலில் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் நிற்பது தான் நமக்கு சரியாக இருக்கும் என்று  கூறினார். 

இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு வேறு ஏதோ ஒரு சுயேச்சை சின்னத்தில் அதிமுகவின் வேட்பாளர்  நின்று அவர்களை வெற்றி கொள்வதில் நமக்கு பெருமையில்லை.

பற்பல ஆண்டுகளாக செல்வாக்கு பெற்ற இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து வெற்றி பெற்றால் தான் அந்த வெற்றி நமக்கு ருசிக்கும்’ என்று கூறினார் முதலமைச்சர். 

இரட்டை இலை இந்த தேர்தலில் போட்டியிட்டால்தான் இந்த போட்டியில் விறுவிறுப்பு இருக்கும். எனவே ஒவ்வொரு பூத்திலும் களப்பணியை தீவிரமாக்குங்கள்” என்று பேசியிருக்கிறார் அமைச்சர் முத்துசாமி.

ஆரா

நெரிசலில் சிக்கி பலியான பெண்கள்: நிவாரணம் அறிவித்த ஸ்டாலின்

டிஜிட்டல் திண்ணை: பன்னீரை பஞ்சர் ஆக்கிய பாஜக- அடைக்கலம் தேடும் ஆதரவாளர்கள்

+1
0
+1
0
+1
0
+1
6
+1
1
+1
0
+1
0