Don't want Sarathkumar locked up in Tamil Nadu

”சரத்குமாரை அடைத்து வைக்க விரும்பவில்லை” : அண்ணாமலை

அரசியல்

சரத்குமாரை தமிழ்நாட்டில் அடைத்துவைக்க நாங்கள் விரும்பவில்லை. அவர் தேசியத்துக்கு தேவைப்படுகிறார் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். Don’t want Sarathkumar locked up in Tamil Nadu

வரும் நாடாளுமன்ற தேர்தலில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைப்பதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிவித்தார்.

இந்த நிலையில், தனது கட்சியை தமிழ்நாடு பா.ஜ.க மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் மற்றும் மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.க-வுடன் இன்று (மார்ச் 12) இணைத்தார்.

சென்னையில் ச.ம.க அலுவலகத்தில் இன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ’நாட்டாமை அண்ணன்’ என்று சரத்குமாரை அழைத்து பேசத்தொடங்கிய அண்ணாமலை,  “அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தனித்தன்மையுடைய கட்சி. சரத்குமாருக்கு நான் எப்போதும் ரசிகன். தமிழ்நாட்டில் மற்ற அரசியல் தலைவர்கள் பேரம் பேசுவார்கள். ஆனால், இவர் அப்படியில்லை. நான் இணைவதால் மோடிக்கு லாபம் என்ன என்று பார்ப்பார்.

நேற்று நள்ளிரவு 2 மணியளவில் தொலைபேசியில் என்னை அழைத்த சரத்குமார், ”நான் முழுவதுமாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை மோடியுடைய பாஜகவில் இணைத்து, 2024 தேர்தலுக்காகப் பாடுபடப்போகிறோம்” என்று தெரிவித்தார்.

அதன்படி மோடியின் குடும்பம் தற்போது பெரிதாகியுள்ளது. இதைக் குறுகிய கண்ணோட்டத்தில் பார்த்தால் இந்தியாவுக்கு (மக்களவைத் தேர்தல்) நல்லது. பெரிய கண்ணோட்டத்தில் பார்த்தால் தமிழ்நாட்டுக்கு (சட்டமன்றத் தேர்தல்) நல்லது.

தமிழ்நாட்டு அரசியலில் ஒரு கட்சியை நடத்துவதே பெரிய விஷயம். அப்படியிருக்க சரத்குமார் தற்போது எடுத்துள்ள முடிவு மிக முக்கியமான முடிவு. இந்த முடிவை அவரை தவிர வேறு யாரும் எடுக்க முடியாது.

இந்த நேரத்தில் பாஜகவை நம்பி நீங்கள் இணைந்துள்ளதை அடுத்து எங்களது பொறுப்பு கூடியிருக்கிறது. இந்த முடிவின் மூலம் தமிழ்நாட்டில் நேர்மையான மனிதர்கள் ஆட்சிக்கு வர அச்சாரம் போட்டிருக்கிறார்.

சரத்குமாரை தமிழ்நாட்டில் அடைத்துவைக்க நாங்கள் விரும்பவில்லை. அவர் இன்று தேசியத்துக்கு தேவைப்படுகிறார்” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். Don’t want Sarathkumar locked up in Tamil Nadu

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

Rebel ‘பிரேமலு’ மமிதா பைஜூ – ஜி.வி.பிரகாஷின் ‘ரெபல்’ ரிலீஸ் தேதி இதுதான்!

IPL 2024 : 14 மாத இடைவெளி… மீண்டும் களமிறங்கும் ரிஷப் பண்ட்

+1
1
+1
5
+1
0
+1
3
+1
1
+1
0
+1
0

1 thought on “”சரத்குமாரை அடைத்து வைக்க விரும்பவில்லை” : அண்ணாமலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *