”எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம் ஆளுநரே” : ஆர்.எஸ் பாரதி

Published On:

| By christopher

dont teach lession to us rsbharathi

“தமிழகத்துக்கு எது சிறந்தது என்று எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம். அதற்கு பதிலாக அரசியலமைப்பு மற்றும் அதன் விழுமியங்களுக்கு மதிப்பளியுங்கள்” என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலளித்துள்ளார். dont teach lession to us rsbharathi

பல்­வேறு மசோ­தாக்­களை கிடப்­பில் போட்டுள்­ளதை எதிர்த்து ஆளு­நருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமி­ழக அரசு வழக்கு தொடர்ந்து உள்­ளது. இந்த வழக்கில் தீர்ப்பினை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம், ஆளுநருக்கு பல கேள்விகளை எழுப்பி பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் கூட்டாட்சி ஆபத்தில் உள்ளது! dont teach lession to us rsbharathi

இதற்கிடையே இந்து ஆங்கிலம் நாளிதழில் வெளியான தலையங்கத்தை நேற்று தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதில் “தமிழக ஆளுநரின் அரசியலமைப்புக்கு முரணான அத்துமீறல்களையும், பாஜக தலைமையிலான ஒன்றிய அரசின் இழிவான ஒப்புதலையும் இந்தியா முழுவதும் உள்ள முன்னணி செய்தித்தாள்கள் மற்றும் அரசியலமைப்பு நிபுணர்கள் மீண்டும் மீண்டும் கண்டனம் செய்வதிலிருந்து மாநிலத்தின் பெயரளவிலான தலைவரான ஆளுநரோ அல்லது அவரது செயல்களை தொடர்ந்து பாதுகாத்து வளர்க்கும் டெல்லியில் உள்ள அவரது பாஜக எஜமானர்களோ எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்பது திகைப்பூட்டும் வகையில் உள்ளது.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களின் வெறுக்கத்தக்க மற்றும் அரசியலமைப்புக்கு முரணான செயல்களை ஒழுங்குபடுத்துவதற்குப் பதிலாக, அரசியல் பகைகளைத் தீர்த்துக்கொள்ள ஒன்றிய அரசு இத்தகைய அத்துமீறல்களுக்கு வெகுமதி அளிக்கிறது. பாஜக ஆட்சியின் கீழ் இந்தியாவின் கூட்டாட்சி முறை ஆபத்தில் உள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.

ஆளுநர் கண்டனம்! dont teach lession to us rsbharathi

முதல்வர் ஸ்டாலினின் இந்த பதிவுக்கு ஆளுநர் கண்டனம் தெரிவித்திருந்தார். அதில், ”உச்சநீதிமன்றம் முன்பாக உள்ள அதன் விசாரணைக்கு புறம்பான ஒரு விஷயத்தில், அரசியலமைப்பில் உயரிய பதவியை வகிக்கும் ஒரு முதலமைச்சர், தனது அரசியலமைப்புப் பொறுப்பை அப்பட்டமாக மதிக்காமல், மிகவும் தரம் தாழ்ந்து முற்றிலும் பாதி உண்மைகள் மற்றும் பாரபட்சம் நிறைந்த ஒரு நாளிதழின் கருத்துக்களை தனது விரக்தியை வெளிப்படுத்துவதற்கான ஒரு ஊன்றுகோலாக, தனது முழுமையான நிர்வாகத் தோல்வியை மறைக்கவும், தனது அரசியல் பாதுகாப்பின்மையை மறைக்கவும் பயன்படுத்தியிருப்பது பரிதாபத்துக்குரியது” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், ஆளுநருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஆளுநர்… வெறுப்பு நிறைந்த ஏஜென்ட் மட்டுமே! dont teach lession to us rsbharathi

அதில், “தமிழக ஆளுநரின் கருத்துகள் அரசியல் சட்ட வரம்புகளை ஒவ்வொரு நாளும் மீறி வருகின்றன. அவரது சட்டவிரோத மற்றும் அரசியலமைப்புக்கு எதிரான நடவடிக்கைகள் தற்போது உச்ச நீதிமன்றத்தில் கேள்விக்குள்ளாக்கப்பட்டு நீதிமன்றத்தால் எழுப்பப்பட்ட அவதானிப்புகள் மற்றும் கேள்விகள் அனைத்து செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்களில் வெளியானது. முதல்வர் ஸ்டாலின், தமிழக ஆளுநரின் நடத்தை குறித்து ‘இந்து’ ஆங்கில நாளிதழின் கட்டுரையை முன்னிலைப்படுத்தியதில் என்ன தவறு உள்ளது?

முதல்வர் தனது எக்ஸ் தளப் பதிவில் நீதிமன்ற நடவடிக்கைகள் எதையும் குறிப்பிடவில்லை. இருப்பினும் பதிலடி என்ற போர்வையில், பதவிக்காலம் முடிந்துவிட்ட நிலையில், வேறு பதவியை பெற நினைக்கும் ஆளுநர், டெல்லியில் உள்ள உயரதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க, தகாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அவரது பதிவு ஆளுநராக அவரது கண்ணியம் இல்லாததை வெளிப்படுத்துகிறது. மேலும் அரசியலமைப்பு சட்டத்தால் வழங்கிய பதவியை அரசியல்மயமாக்கிக் கொண்டுள்ளார் என்பதை நிரூபிப்பதாக உள்ளது.

‘தி இந்து’ பத்திரிக்கையானது நன்மதிப்பை பெற்ற செய்தித்தாள். அதன் வரலாறு முழுக்க சுதந்திரமான மற்றும் அதீத நேர்மையை கடைபிடித்து ஒருமைப்பாட்டினை காக்கும் வகையில் இருந்து வருகிறது. சாவர்க்கரையும் கோட்சேவையும் பின்பற்றுபவர்களுக்கு நேர்மை என்பது அந்நியமானதாக இருந்தாலும், மாநில ஆளுநர் பத்திரிகைகளை அவமதிக்க கூடாது என்பதைத்தான் பொதுமக்கள் எதிர்பார்ப்பர். ஆளுநர் தனது எக்ஸ் தளப்பதிவில் எந்த ட்விட்டர் கணக்குகளை குறிப்பிட்டு இணைத்துள்ளார் என்பதை பார்க்கும் போது வேடிக்கையாக உள்ளது.

ஒருவேளை அவர் அந்த தனிநபர்கள் மற்றும் செய்தி நிறுவனங்களின் ஆதரவை எதிர்பார்க்கிறாரா? அவர் தமிழக அரசின் அரசியல் எதிரியாக செயல்பட்டு ஆளுநர் மாளிகையை தவறாக பயன்படுத்தவில்லையா? அரசியல் பாதுகாப்பின்மை மற்றும் தமிழக மக்களைப் புரிந்துகொள்வதை பற்றி ஆளுநர் பேசுகிறார். அரசியல் பற்றி வகுப்பெடுக்க இந்தியாவில் எங்காவது ஒரு இடத்தில் தேர்தலில் போட்டியிட்டுள்ளாரா ஆளுநர்? அவர் பாஜகவால் நியமிக்கப்பட்ட வெறுப்பு நிறைந்த ஏஜென்ட் மட்டுமே.

அரசியலமைப்புக்கு மதிப்பளியுங்கள்!

தமிழக மக்களையும் திமுகவினையும் உண்மையிலேயே ஆளுநர் புரிந்து கொள்ள விரும்பினால் அவரது பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்து அவரே தேர்ந்தெடுக்கும் ஏதாவதொரு சட்டமன்ற தொகுதியில் நின்று தேர்தலில் போட்டியிடுமாறு அழைக்கிறோம். நோட்டாவுக்கு கீழ் வாக்குகள் வாங்குவதையாவது தவிர்ப்பாரா என்று பார்ப்போம்.

ஆளுநரே, ஆட்சியைப் பற்றி உங்களிடமிருந்து எங்களுக்கு எந்த விரிவுரைகளும் தேவையில்லை. இந்த மாநிலம் கல்வியில் முதல் இடத்தில் உள்ளது. தொழில், வேலைவாய்ப்பு மற்றும் பிற நல்லாட்சி குறியீடுகளில் முன்னணியில் உள்ளது. நீங்கள் வருவதற்கு முன்பே நாங்கள் ஒரு செழிப்பான நிலையை அடைந்துள்ளோம். தமிழகத்துக்கு எது சிறந்தது என்று எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம். அதற்கு பதிலாக அரசியலமைப்பு மற்றும் அதன் விழுமியங்களுக்கு மதிப்பளியுங்கள். மாறாக தமிழக மக்களையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் இறையாண்மையையும் அவமதிக்காதீர்கள்,” என்று அவர் கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share