’அந்த நான்கு பேரைப் பற்றி பேசாதே’ : கட்சியினருக்கு சீமான் கட்டளை!

Published On:

| By christopher

மக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிற நிலையில் நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நேற்று பிப்ரவரி 17ஆம் தேதி சென்னையில் நடந்தது.

ஆங்காங்கே தொகுதிகளின் வேட்பாளர்களை அறிவித்து வருகிறார் சீமான். இதையடுத்து ’அந்த வேட்பாளர் சரியில்லை’, ’இந்த தொகுதியில் ஏற்கனவே தேர்தல் பணியில் ஈடுபட்டு வருபவரை புறக்கணித்துவிட்டு புதிதாக வந்தவருக்கு வாய்ப்பு கொடுக்கிறீர்கள், இது சரியல்ல’ என்றெல்லாம் சீமானுக்கு புகார்கள் போயிருக்கின்றன.

Image

இந்த நிலையில் நேற்று ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய சீமான், “ஒவ்வொரு தொகுதிக்கும் வேட்பாளரை நான் தான் முடிவு செய்கிறேன். அந்த வேட்பாளர் சரியில்லை என்று நீ என்னிடம் சொன்னால் நான் சரியில்லை என்று தானே சொல்கிறாய்? நமது கட்சியை பொறுத்த வரைக்கும் வேட்பாளர் என்பது ஒரு கருவி மட்டும் தான். தேர்தல் ஆணையம் ஒருவரை நிறுத்த வேண்டும் என்று கூறியிருப்பதால் நாம் பல்வேறு தகுதி படைத்த நம் நபர்களில் இருந்து ஒருவரை மட்டும் நிறுத்துகிறோம்.

மற்றபடி எல்லா தொகுதிகளும் நமது கட்சி தான் வேட்பாளர் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
நமக்குள் சச்சரவு கொண்டிருக்காமல் ஒற்றுமையாக இருந்து தேர்தல் வேலைகளை பாருங்கள்.

வருகிற மக்களவைத் தேர்தலில் அதிக வாக்குகள் வாங்கக்கூடிய தொகுதியின் பொறுப்பாளர், அதிக வாக்குகள் வாங்கி தரக்கூடிய சட்டமன்றத் தொகுதியின் பொறுப்பாளர், வாக்குச்சாவடி பொறுப்பாளர் என ஒவ்வொருவருக்கும் பிரபாகரன் படம் போட்ட தங்க நாணயத்தை நானே பரிசாக கொடுப்பேன்”என்று தெரிவித்த சீமான் கட்சியினருக்கு முக்கியமான ஒரு கட்டளையை பிறப்பித்துள்ளார்.

Image

“நமது தம்பிகள் மேடைகளிலும் சமூக தளங்களிலும் நமது அன்புக்குரிய சில தலைவர்களை தொடர்ந்து விமர்சித்து வருகிறீர்கள். அவர்கள் நம்மைப் பற்றி பேசினாலும் நாம் அது பற்றி கவலைப்படாமல் கடந்து விட வேண்டும்.

அண்ணன் திருமாவளவன், அய்யா வைகோ, அய்யா ராமதாஸ், சகோதரர் அன்புமணி ஆகியோரை பற்றி நாம் தமிழர் தம்பிகள் இனி விமர்சிக்க வேண்டாம்” என்று அன்பு கட்டளை இட்டுள்ளார் சீமான்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வேந்தன்

விமர்சனம் : ஊரு பேரு பைரவகோனா!

எலெக்‌ஷன் ஃபிளாஷ் : அறிவாலயத்தில் காத்திருக்கும் 2 பென்ஸ் பிரச்சார வேன்!