காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ,புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிடம் கட்சியின் அமைப்பு விஷயங்களில் தான் தலையிட மாட்டேன் என்றும் நீங்கள் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஒற்றுமை நடைபயணத்திலிருந்து இரண்டு நாட்கள் ஓய்வு எடுத்துகொண்ட ராகுல் காந்தி காங்கிரஸ் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மல்லிகார்ஜூன கார்கேவை சந்திப்பதற்காக தலைநகர் டெல்லிக்கு சென்றிருந்தார்.

அப்போது, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் ஆகியோர் ராகுல் காந்தியை சந்திக்க நேரம் கோரியிருந்தனர். ஆனால் ராகுல் காந்தி அவர்களை சந்திக்க மறுத்துவிட்டார்.
குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான கட்சி வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் நடவடிக்கைகளில் தாம் ஈடுபட மாட்டேன் என்றும் ராகுல் காந்தி கட்சி தலைமையிடம் தெரிவித்துள்ளார்.
டெல்லி சென்றிருந்த ராகுல் காந்தி, தனிப்பட்ட முறையில் கார்கேவை சந்திக்கவில்லை.
மல்லிகார்ஜூன கார்கேவிடம் கட்சியில் தன்னுடைய வேலைகள் குறித்து அறிக்கை அளிப்பதாக ராகுல் காந்தி முன்னதாக கூறியிருந்தார்.
தற்போது காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தியின் செயல்பாடுகள் காங்கிரஸ் நிர்வாகிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
கட்சியின் அமைப்பு ரீதியிலான நடவடிக்கைகளில் தான் ஈடுபட மாட்டேன் என்பதில் ராகுல் காந்தி தெளிவாக உள்ளார்.
ராகுல் காந்தி, கட்சி செயல்பாடுகளில் தலையிட மாட்டேன் என்று கூறினாலும் கட்சி மூத்த தலைவர்கள் மற்றும் ராகுலுக்கு நெருங்கியவர்கள் அதனை விரும்பவில்லை.
அவர்கள் ராகுல் காந்தி கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று அவருக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

சமீப நாட்களில் கார்கேவுடன் உரையாடிய கட்சி தலைவர்கள் கூற்றுப்படி, கார்கே சுதந்திரமாகவும், ஒருதலைபட்சமில்லாமலும் செயல்படுவதில் எச்சரிக்கையாக உள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.
செல்வம்
இண்டிகோ விமானத்தில் தீ விபத்து: பயணிகள் நிலை?
81 நிமிடங்களில் படமாக்கப்பட்ட ‘3.6.9.’!