Don't drag judiciary for politics - Chennai High Court discontent to CV Shanmugam

அரசியலுக்காக நீதித்துறையை இழுக்காதீர்கள்? : உயர் நீதிமன்றம்!

அரசியல்

அரசியல் போராட்டங்களில் தேவையில்லாமல் நீதித்துறையை ஏன் இழுக்கிறீர்கள் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழக அரசை கண்டித்தும், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்தும் போராட்டம் மற்றும் சாலை மறியல் நடத்தியது, விழுப்புரத்தில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை எதிர்த்து உண்ணாவிரத போராட்டம் நடத்தியது உள்ளிட்ட விவகாரங்களில் பதிவான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுக்கள், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று (ஜூலை 20) விசாரணைக்கு வந்தன.

இதை விசாரித்த நீதிபதி, சில வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததைச் சுட்டிக்காட்டி, 6 வழக்குகளை ரத்து செய்தார்.

அதுபோன்று 3 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டி, விசாரணை நீதிமன்றத்தை நாடி உரிய நிவாரணம் பெறும்படி நீதிபதி அறிவுறுத்தினார்.

மேலும் ஒரு வழக்கை திரும்பப்பெற அனுமதித்தும் உத்தரவிட்டார். இதுதவிர சி.வி.சண்முகம் தாக்கல் செய்த 2 மனுக்களுக்கு 6 வாரங்களில் பதிலளிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டார்.

Madras High Court Chief Justice grants approval for listing of Tamil Nadu Minister Senthilbalaji case before a Division Bench once again - The Hindu

அதுபோன்று, “ஜெயக்குமார் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் போராட்டம் நடத்தியபோது, அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிபதி அச்சுறுத்தப்பட்டிருக்கிறார், மிரட்டப்பட்டிருக்கிறார் என சி.வி.சண்முகம் பேசியதை குறிப்பிட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அரசியல் போராட்டங்களில் தேவையில்லாமல் நீதித்துறையை ஏன் இழுக்கிறீர்கள்? நீதிபதி அச்சுறுத்தப்பட்டிருக்கிறார், மிரட்டப்பட்டிருக்கிறார் என எப்படி கூறமுடியும்? என கேள்வி எழுப்பினார்.

உங்கள் அரசியலுக்காக நீதித்துறையை இழுக்காதீர்கள் என அதிருப்தி தெரிவித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “எந்த கட்சி என நீதிமன்றங்கள் பார்ப்பதில்லை. நீதித்துறையை பொறுத்தவரை ஒரே ஒரு அரசு தான்” என தனது உத்தரவின் போது கூறினார்.

பிரியா

மணிப்பூர் பெண்களின் வீடியோ : என்ன நடந்தது – யார் பொறுப்பு?

ஓ.பி.ரவீந்திரநாத் வழக்கில் மேல்முறையீடு செய்வோம்: ஓபிஎஸ்

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *