முன்னாள் முதல்வர் ஒபிஎஸ்ஸின் திடீர் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.
மதுரையில் இருந்து நேற்று (அக்டோபர் 6) காலை விமானம் மூலம் ஓபிஎஸ் டெல்லி சென்றார். இந்தசூழலில், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஓபிஎஸ் 25 நிமிடங்கள் சந்தித்தார் என்றும் இந்த சந்திப்பின் போது அதிமுகவில் மீண்டும் இணைவது குறித்து பேசியதாகவும் பாஜகவில் ஓபிஎஸ் சேரப்போவதாகவும் பலவிதமான செய்திகள் ஊடகங்களில் இன்று (அக்டோபர் 7) பரவியது.
இதைப் பற்றி டெல்லி வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது, “பாஜக தலைவர்கள் யாரையும் இன்று வரை ஓபிஎஸ் சந்திக்கவில்லை. தமிழ்நாடு ஹெஸ்ட் ஹவுஸிலும் அவர் தங்கவில்லை” என்றனர்.
ஒபிஎஸ் குடும்ப வட்டாரத்தில் விசாரித்தோம்… “ஒபிஎஸ் மற்றும் அவரது மூத்த மகனும் முன்னாள் எம்பியுமான ரவீந்தரநாத் குமார், இளைய மகன் ஜெயபிரதீப் ஆகிய மூவரும் டெல்லியில் தான் இருக்கின்றனர்.
பிரதீப்புக்கு ஏற்கனவே கால் பகுதியில் எலும்பு பிரச்சினை இருந்தது. தற்போது வலி அதிகமானதால் டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதனால் ஒபிஎஸ் மற்றும் ரவீந்திரநாத் ஆகியோர் அவருக்கு உதவியாக இருக்கிறார்கள்” என்கிறார்கள்.
இதற்கிடையில், பாஜகவின் சீனியர் லீடர்களை சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டிருப்பதாகவும், அப்போது மீண்டும் அதிமுகவில் ரீ என்ட்ரி கொடுப்பது குறித்தும் அதில் உள்ள பிரச்சனைகள் குறித்தும் பேச இருப்பதாகவும் சொல்கிறார்கள்.
வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘பிக் பாஸ் – 8’: முதல் நாளே இப்படியா? – விஜய் சேதுபதி செய்த ‘தக் லைஃப்’ மொமண்ட்ஸ்!
மேலே ஏவுகணை பறக்குது, கீழே எப்படி விளையாட முடியும்? – மோகன் பகான் அணி சந்தித்த பிரச்னை!