இளைஞரணி மாநாடு டொனேஷன்: மாசெக்களுக்கு காத்திருக்கும் ஷாக்!

அரசியல்

சென்னை தியாகராய நகர் அக்கார்டு ஹோட்டலில் நாளை (நவம்பர் 26) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் வரும் டிசம்பர் மாதம் சேலத்தில் நடைபெற இருக்கும் இளைஞரணி மாநாடு குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.

இதற்காக திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதியும், இளைஞரணியின் 9 மாநில துணைச் செயலாளர்களும் இந்த கூட்டத்துக்கு சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

இந்த நிலையில் இன்று (நவம்பர் 25) திமுகவின் மாவட்டச் செயலாளர்களுக்கு இடையே ஒரு விஷயம் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

இளைஞரணி மாநாட்டு நிதிக்காக நாளை மாவட்டச் செயலாளர்களுக்கு தலைமை ஒரு முக்கியமான உத்தரவை பிறப்பிக்கப் போகிறது. அதாவது ஒவ்வொரு மாசெவுக்கும் 5 டொனேஷன் புக் கொடுக்கப் போகிறார்கள்.

அந்த டொனேஷன் புக்கில் எத்தனை சிலிப்புகள் இருக்கும் என்று தெரியவில்லை. ஒரு புக்கில் அதிகபட்சமாக 100 சிலிப்புகள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதில் ஓவ்வொரு சிலிப்பிலும் டொனேஷன் வாங்கிய கையோடு உரியவரின் பேன் கார்டு நம்பரையும் இணைக்க வேண்டும் என்று தலைமை அறிவுறுத்த இருக்கிறதாம். அதாவது பேன் கார்டு நம்பர் இணைக்க வேண்டுமென்றால் குறைந்தபட்ச நன்கொடை 50 ஆயிரம் ரூபாயாக இருக்க வேண்டும்.

அப்படி என்றால் ஒரு டொனேஷன் புக் என்றால் குறைந்தபட்சம் 50 லட்சம் வசூல் செய்ய வேண்டுமா? மொத்தம் 5 புக் என்றால் ஒவ்வொரு மாசெவுக்கும் இரண்டரை கோடி வசூல் டார்க்கெட்டா என்ற விவாதம்தான் இப்போதே மாசெக்களிடம் ஷாக் ஆன விவாதமாக ஓடிக் கொண்டிருக்கிறது. எவ்வளவு டார்கெட் என்று நாளை மாசெக்கள் கூட்டத்தில்தான் தெளிவாக தெரியும் என்று சொல்கிறார்கள் திமுக மாசெக்கள்.

-வேந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கே.எஸ்.அழகிரியை கண்டித்து ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் போராட்டம்!

பியூட்டி டிப்ஸ்: சருமத்தில் தோன்றும் பால் மருக்கள்… நீக்குவது எப்படி?

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0