நாளை திமுக இளைஞரணியின் 2ஆவது மாநாடு நடைபெறவிருக்கும் நிலையில், மாநாட்டு திடலில் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் இன்று (ஜனவரி 20) மாலை ஆய்வு செய்தார்
நாளை காலை திமுகவின் இரண்டாவது இளைஞரணி மாநாடு, சேலம் மாவட்டம் பெத்தநாயகன்பாளையத்தில் நடைபெறுகிறது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், மாநாட்டில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து சேலத்துக்கு தனி விமானம் மூலம் சென்றார் முதல்வர் ஸ்டாலின். ஓமலூர் அருகே இருக்கும் சேலம் விமான நிலையத்தில் இருந்து மாநாடு நடக்கும் பெத்தநாயகன்பாளையத்துக்கு காரில் சென்றார்.
இதனிடையே சேலம் மாநாட்டு திடலுக்கு வந்தடைந்த மாநாட்டு சுடரை திமுக இளைஞரணி துணை செயலாளர் ஜோயல், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார்.
அந்த சுடரை திமுக தலைவர் ஸ்டாலினிடம் வழங்கினார் உதயநிதி. தொடர்ந்து மாநாட்டுக்கான பணிகள் குறித்து ஆய்வு செய்தார் முதல்வர் ஸ்டாலின்.
திடலில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் அமர்ந்து அங்கு நடைபெறும் நிகழ்ச்சியினை பார்வையிட்டு வருகிறார். அப்போது, கடந்த நவம்பரில் கன்னியாகுமரியில் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்த இருசக்கர வாகன பேரணியும் மாநாட்டு திடலுக்கு வந்தடைந்தது. 1,000 ட்ரோன்களைக் கொண்டு நடந்த ட்ரோன் ஷோவையும் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டுகளித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
13 ஆண்டுகளுக்கு பின் தனுஷுடன் இணையும் ராக் ஸ்டார்!
திமுக இளைஞரணி மாநாடு : சேலத்தில் போக்குவரத்து மாற்றம் – தவிக்கும் பயணிகள்!