கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக மகளிர் அணி ஒருங்கிணைப்பில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் மகளிர் உரிமை மாநாடு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று (அக்டோபர் 14) மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பேருரையாற்றுகிறார். அவரை தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின், துணை பொதுச்செயலாளர் கனிமொழி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் சுப்ரியா சுலே, பிகார் மாநில உணவுத்துறை அமைச்சர் லெஷி சிங், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொலிட்பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் ஆனி ராஜா, ஆம் ஆத்மி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் ராக்கி பிட்லன், சமாஜ்வாதி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டிம்பிள் யாதவ் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
மாநாட்டில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா இருவரும் நேற்று இரவு சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.
அவர்களை முதல்வர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
திமுக மகளிர் உரிமை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் இருந்து மகளிர் அணி நிர்வாகிகள் சென்னை வந்துள்ளனர். அவர்கள் தங்குவதற்காக திருமண மண்டபங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
செல்வம்
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
இஸ்ரேலில் இருந்து 235 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்!
நியூசிலாந்து ஹாட்ரிக் வெற்றி: முதல் இடத்தில் தொடரும் ஆதிக்கம்!