திமுக அரசு 70 சதவிகிதம் தோல்வி அடைந்துவிட்டதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் விமர்சித்துள்ளார்.
மதுரை அட்சய பாத்திரம் அறக்கட்டளையின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, பார்வையற்றோருக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி எஸ். எஸ்.காலனியில் இன்று (மே 6) நடைபெற்றது.
இவ்விழாவில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர் ‘கள்ளழகர் ஆற்றிலே இறங்கிய நிகழ்வின் போது நீரில் மூழ்கி உயிரிழந்த மூன்று பேரின் குடும்ப நலனை கருத்தில் கொண்டு முதல்வர் நிவாரணம் அறிவிக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘இந்த இரண்டு ஆண்டுகளில் திமுக அரசு சாதித்ததை காட்டிலும் சறுக்கியதுதான் அதிகம். அதேபோன்று தாங்கள் ஆட்சியில் அமர்வதற்கு உறுதுணையாக இருந்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல், நிலுவையில் வைத்திருக்கிறார்கள். மக்கள் இன்றைக்கு அந்த வாக்குறுதிகளை எப்போது நிறைவேற்றுவார்கள் என்கிற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். ஆனால் பூஜ்ஜியமாகத்தான் இன்றைக்கு அரசினுடைய செயல்பாடுகள் இருக்கிறது’ என்றார்.
தொடர்ந்து பேசிய உதயக்குமார், ‘விளம்பரத்தால் கட்டமைக்கப்பட்டிருக்கிற திமுக அரசின் இந்த இமேஜ் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கிய பொருள்களின் தரத்தின் மூலமாக தகர்க்கப்பட்டது
இன்றைக்கு 12 மணி நேர வேலை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். இந்த அரசை வழிநடத்துவது முதலாளிகளா? அதிகாரிகளா? அல்லது ஆட்சியாளர்களா? இந்த சந்தேகத்தை கூட்டணி கட்சித் தலைவர்களே எழுப்பி இருக்கிறார்கள் என்று சொன்னால் இந்த அரசினுடைய செயல்பாடு எப்படி கேள்விக்குறியாய் இருக்கிறது.
தீக்கதிர் நாளிதழும், முரசொலியும் நடத்திய ஒரு வார்த்தை யுத்தங்களை, எழுத்து யுத்தங்களை இன்றைக்கு நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்
மதுபான விற்பனை என்பது கல்யாண மண்டபங்களில் ,விளையாட்டு திடல்களில் அங்கே சிறப்பு கட்டணத்தை செலுத்தி மதுபானங்களை பெற்றுக் கொள்ளலாம் என்று விதிக்கப்படுகிற அரசாணை, அதை மறுபடியும் பின்வாங்குவது.
12 மணி நேர வேலை மசோதா தாக்கல் செய்வது பின்வாங்குவது, நீட் தேர்வு ரத்து என்று சொன்னதை கிடப்பில் போட்டது, மாணவர்களுக்கு கல்வி கடன் ரத்து என்று சொன்னதை கிடைப்பில் போட்டது, ஆயிரம் ரூபாய் இன்னும் 4 மாதங்கள் கழித்து வழங்குவோம் என்று சொல்வது, அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதி திட்டத்தை நாங்கள் செயல்படுத்துவோம் என்று சொன்னது என எதுவும் நிறைவேறாது.
இன்றைய திராவிட முன்னேற்றக் கழக அரசு வெற்றி பெற்றது 30 சதவீதம் என்றால், தோல்வி பெற்றது 70 சதவீதமாக உள்ளது. ஆகவே இந்த திராவிட முன்னேற்றக் கழக அரசு தோல்வி அரசாக இருக்கிறது’ என குறிப்பிட்டார்.
மதுரையிலே ஆகஸ்ட் 20-ம் தேதி நடைபெறும் மாநாடு இந்தியாவை திரும்பிப் பார்க்கும் வகையில் எடப்பாடியார் நடத்தி காட்டுவார்’ என்றும் கூறினார் ஆர்.பி உதயக்குமார்.
இராமலிங்கம், பிரியா
முடி சூட்டிக்கொண்ட மூன்றாம் சார்லஸ்
மதுரை சிறுவனின் ஆசையை சேப்பாக்கில் நிறைவேற்றிய ரோகித் சர்மா