நாடாளுமன்ற தேர்தலோடு திமுகவுக்கு எதிர்காலம் இருக்காது என மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மதுரை முனிச்சாலையில் வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக மாநாடு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, செல்லூர் கே.ராஜூ, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் ராஜ்சத்யன் ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று (ஜூலை 22) நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின் அதிமுக மாநாடு தொடர்பான ஸ்டிக்கர் வாகனங்களில் ஒட்டப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், “கரி கட்டையால் அதிமுக வரலாற்றை சுவரில் எழுதி கட்சியை வளர்த்தோம். மதுரையில் அதிமுக மாநாட்டை தொண்டர்கள் நடத்துகிறார்கள், அதிமுகவினர் குடும்பம் குடும்பமாக மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
மற்ற கட்சிகள் மாநாட்டுக்கு கூட்டத்தை கூட்டுகிறார்கள்.. ஆனால் அதிமுக மாநாட்டில் தானாக கூட்டம் சேரும். நாடாளுமன்ற தேர்தலோடு திமுகவுக்கு எதிர்காலம் இருக்காது. அளவு கோலை மீறும் பொழுது தான் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தும். தனக்கு வந்தால் ரத்தம் அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி சட்னி என்பது போல முதல்வர் பேசுகிறார்.
உப்பை தின்றவன் தண்ணீர் குடித்தாக வேண்டும், தவறு இழைத்தவன் தண்டனை அனுபவித்தாக வேண்டும், அமலாக்கத்துறை விசாரணையில் பாகுபாடு காட்டவில்லை. தவறு செய்தவர்களிடம் மட்டுமே அமலாக்கத்துறை விசாரணை நடத்துகிறது” என செல்லூர் ராஜு கூறினார்.
ராமலிங்கம்
அரிசிக்காக சண்டை போடும் அமெரிக்க மக்கள்!
எனக்கு அதிக வேலை இல்லை: ஆளுநர் ஆர்.என்.ரவி