வார்த்தைக்கு வார்த்தை ஆபாச பேச்சு: திமுக ஒன்றிய செயலாளர் சஸ்பெண்ட்!

Published On:

| By Kavi

சேலத்தில் கோயிலில் நுழைந்ததாகப் பட்டியலின இளைஞரை ஆபாசமான வார்த்தைகளால் திட்டி பொதுவெளியில் அசிங்கப்படுத்திய திமுக சேலம் தெற்கு ஒன்றிய செயலாளர் மாணிக்கம் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள திருமலைகிரி கிராமத்தில் பெரிய மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பிரவீன் சென்றிருக்கிறார்.

இதை அறிந்த சாதியவாதிகள் பட்டியலினத்தவர் கோயிலுக்குச் சென்றால் தீட்டு என கூறியதாகத் தெரிகிறது. இந்தச்சூழலில் ஒன்றிய திமுக செயலாளரும் திருமலைகிரி ஊராட்சி மன்றத் தலைவருமான டி.மாணிக்கம், கடந்த 27ஆம் தேதி பொதுவெளியில் வைத்து பிரவீனை கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

வார்த்தைக்கு வார்த்தை ஆபாசமாக பிரவீனை மிரட்டும் அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.

DMK union secretary removed for Obscenity speech


இந்தநிலையில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாணிக்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

அதோடு, திமுக ஒன்றியச் செயலாளர் மாணிக்கம் மீது எஸ்சி,எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். அவரை கிராமத்தை விட்டே வெளியேற்ற வேண்டும். ஓரிரு தினங்களில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி பெரிய மாரியம்மன் கோவிலில் தலித் மக்களை ஆலயத்திற்குள் அழைத்துச் செல்லும் ஆலய நுழைவுப் போராட்டத்தை நடத்தும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் மாணிக்கத்தைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

பிரியா

அதிமுக பொது செயலாளர் பதவி : சசிகலா கேவியட் மனு!

“அந்த வலி மோடிக்கும் அமித் ஷாவுக்கும் புரியாது”: ராகுலின் யாத்திரை நிறைவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.