திமுக முப்பெரும் விழாவில் விருது பெறுபவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வரும் செப்டம்பர் 17ஆம் தேதி வேலூரில் திமுக முப்பெரும் விழா நடைபெறுகிறது. திமுக முப்பெரும் விழாவி்ல் ஆண்டு தோறும் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது ஆகிய விருதுகள் வழங்கப்படும்.
இந்த ஆண்டு யார் யாருக்கு விருது வழங்கப்படும் என்று திமுக தலைமை இன்று அறிவித்துள்ளது. அதன்படி கலைஞர் விருதை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பெறவுள்ளார்.
விருது பெறுவோர்கள்…
பெரியார் விருது – மயிலாடுதுறை கி.சத்தியசீலன்
அண்ணா விருது -மீஞ்சூர் க.சுந்தரம்
கலைஞர் விருது – ஐ.பெரியசாமி
பாவேந்தர் விருது -தென்காசி மலிகா கதிரவன்
பேராசிரியர் விருது -பெங்களூர் ந.இராமசாமி ஆகியோருக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா
அரசு வேலைகளுக்கு தயாராவோர் கவனத்திற்கு… டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு!