10 சதவீத இடஒதுக்கீடு: திமுக சீராய்வு மனு!

அரசியல்

உயர்சாதி ஏழைகளுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உயர்சாதி ஏழைகளுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு வழக்கில் கடந்த நவம்பர் 7 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 5 நீதிபதிகள் அமர்வில் 3 நீதிபதிகள் ஆதரவாகவும் 2 நீதிபதிகள் எதிராகவும் தீர்ப்பு அளித்தனர்.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராகப் பலரும் கருத்து தெரிவித்ததோடு, இந்த தீர்ப்பினை மறு சீராய்வு செய்ய வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினர்.

தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் தலைமையில் 10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. பின்னர் பேசிய முதலமைச்சர் இந்த வழக்கு தொடர்பாகச் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று (டிசம்பர் 5) 10 சதவீத இடஒதுக்கீடு வழக்குத் தீர்ப்பு தொடர்பாக திமுக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்துள்ளது.

மோனிஷா

கோயில் பிசினஸ்: திருமாவை விமர்சித்த நாராயணன் திருப்பதி

பரந்தூர் விமான நிலையம்: ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.