காங்கிரஸ் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜுன கார்கே குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ட்விட்டரில் கருத்து பதிவிட்டதால், திமுக செய்தி தொடர்பு செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கழக செய்தித் தொடர்புச் செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்கள் கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வருவதால்,
அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜுன கார்க்கே தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில், “மன்மோகன் சிங் 2.0-ஆக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வாழ்த்துக்கள்” என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டிருந்தார்.
அவரது ட்விட்டர் பதிவிற்கு சமூக வலைதளங்களில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்ததால், அந்த பதிவை கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்திலிருந்து நீக்கினார்.
அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து அவரது கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
கனமழை: எந்தெந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை?
எல்லா மாவட்டங்களிலும் ஹெலிகாப்டர் இறங்குதளம்: மத்திய அரசு முடிவு!
இதெல்லாம் உண்மையான காரணம் இல்லை. தற்போது உதயநிதியை போன்றவர்களுடன் கே.எஸ்ஆர் போன்ற மூத்த அரசியல்வாதிகள் இணக்கம் காட்டுவதில்லை. ஜால்ரா போடத் தெரியாத இந்த மனிதர் நீக்கப்பட்டுள்ளார். இவர் நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர். இதே நாயுடு வகுப்பைச் சேர்ந்த சேகர் பாபு என்னமா வளைகிறார், நெளிகிறார் பாருங்கள். இதுபோல மூத்தவரான கேஎஸ்ஆர் செய்ய முடியாது. இவரது முதுகு வளையாது. சுயமரியாதைக்காரன் எங்கும் இப்படித்தான் இருப்பான். இவர் இருக்க வேண்டிய இடம் திமுக அல்ல.
அவர் ஒரு முறை கூட சட்டமன்ற உறுப்பினராக இல்லை அவர் போட்டியிட்டு தோல்வி அடைந்து விட்டார்